உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
202 ||

அப்பாத்துரையம் - 14



||-


கொங்குச் சேரர் குடித் தொடர்புடைய ஆண் பெண் புலவர் பலரை நாம் சங்கப்புலவரிடையே காண்கிறோம். கொங்குச் சேரமரபு மிக நீண்டகால மரபு என்பதை இது காட்டுகிறது. (ஐங்குறுநூறு தொகுப்பித்ததுகூட ஒரு கொங்குப் பெருஞ் சேரனேயாவான்). ஆனால் மேலே சுட்டிய அறிஞர் சீனி வேங்கடசாமியின் கணிப்பின்படி, அது கி.பி.92 முதல் 210 வரை 118 ஆண்டுகளே நிலவியதாகக் கருதப்படுகிறது. மூத்த சேரமரபின் முதல் தலைமுறையே செங்குட்டுவன் ஆட்சி இறுதி (கி.பி. 185) ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்டால், கி.பி. 52-ல் தொடங்குவது ஆகிறது அதன் தாயாதி மரபாகத் தொடங்கும் கொங்கு மரபும் குறைந்தது அதே அளவு பழமை யுடையதாய் இருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. செங்குட்டுவன் ஆட்சிக் கணிப்புக்கு ஆதாரமான இலங்கைக் கயவாகுவின் காலமும் ஒரு நூற்றாண்டளவு முற்பட்டது ஆகலாம் என்று கருதுபவர் உண்டு. இந் நிலையில் இருமரபுகளின் தொடக்கத் தலைமுறைகளும் இன்னும் முற்பட்டவை (குறைந்தது 40 ஆண்டுகளாவது முற்பட்டவை) ஆதல் கூடும்.

ஐங்குறுநூற்று ஆதன் அவினி சிற்றரச மரபினனே எனக் கொண்டாலும், சங்கப் புலவர் இருவர், கல்வெட்டில் கண்ட மூவர் ஆக ஐவர் மேலே தொடர்மரபாகக் குறிக்கப்பட்ட ஆறு கொங்குச் சேரர் மரபுக் கால் வழியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. பேரரசின் ஆட்சி அதில் முதல் அரசருடன் தொடங்கி, இறுதி அரசருடன் முடிகிறது என்பதை உறுதியாகக் கூறலாம். எனவே, இந்த ஐந்து அரசரும், இரு மரபு ஒப்பீட்டால் ஏற்படும் நாற்பதாண்டு வேறுபாடு, செங்குட்டுவன் விழாக்கால மரபு இடையீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நான்காம் ஐந்தாம் அரசருக்கு (இளஞ்சேரல் இரும்பொறை, மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆகியோருக்கு) முன்னோ, பின்னோ, இடைப்பட்டோ நிகழ்ந்திருக்கக்கூடிய இடைவெளிகளுக்கு உரியவர்கள் ஆகலாம். இவர்களையும் கல்வெட்டுகளால் அறியப்படும் பாண்டியர் போன்ற பிற அரசர்களையும் சங்கப்பாடல் மரபு குறிக்காமல், அல்லது அத்தகைய பாடல்கள் தொகுப்புகளில் சேர்க்கப்படாமல் போனதற்கு அவர்கள் முனைத்த புத்த சமண மரபு அல்லது