உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
210 ||

அப்பாத்துரையம் - 14



()

||


நாட்டையும் கைக்கொண்டான். அது போலவே மலையமான் திருமுடிக் காரியின் பக்கத்துணையுடன் அவன் கொல்லி மலை அதன் ஓரியைத் தாக்கி, அவன் உதவிக்கு வந்த அதியமானைத் துரத்தியபின், ஓரியைக் கொன்று அவன் நாட்டையும் கைக்கொண்டான். இதன்பின் சோழ பாண்டியராகிய மற்ற இரு தமிழக அரசரும் வந்து அதியமான் நெடுமான் அஞ்சிக்கு உதவிய நிலையிலும்,அவன் காரியுடன் சென்று தகடூரைப் பல ஆண்டுகள் முற்றுகை செய்து தகர்த்து, அந் நாட்டைக் கைக்கொண்டான். தகடூர்ப் படைத்தலைவன் பெருப்பாக்கன், பெருவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி, அவன் வீர இளங்குருளையான பொகுட்டெழினி ஆகியவர்களின் வீரமாள்வுக்குரிய இப்பெரும் போரை அரிசில் கிழார், பொன்முடியார் போன்ற சங்கப் புலவர்களின் நேர்முக வருணனையாகப் பாடும் (சில பாடல்கள் தவிர அழிந்துபட்ட) கொங்குப் பாரதமான தகடூர் யாத்திரை பற்றி மேலே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தகடூர் யாத்திரையின் நேர்முகக்காட்சி வருணனையில் இடம் பெற்ற புலவர்களில் ஒருவரான அரிசில் கிழாரே, பெருஞ்சேரல் இரும் பொறையைப் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தில் பாடியவர் ஆவர். கொங்குச்சேரன் புலவருக்கு வழங்கிய பரிசிலின் பெருமிதமே, அவன் காலத்தில் பேரரசு அடைந்த வீறுயர்ச்சியினைக் காட்டுவதாகும். அது எந்தப் புலவருக்கும் எந்த அரசனோ பேரரசனோ அளிக்கக் கனவு காணாத பீடு உடையது; பதிகத்தின் மொழியில் கூறுவதானால் இப்பேரரசன் புலவருக்குக் கைச் செலவுக்கென்று ஒன்பது நூறாயிரம் காணம் (காணம்-தங்க நாணயம்) வழங்கியபின், தானும் தன் அரசியும் தவிசிலிருந்து இறங்கிப் புறம் போந்து அரண்மனையும் நாடும் அரசும் கொள்க எனக் கொடுக்க முன்வந்தான். புலவர் அடக்கத்துடன் ‘என் பெயரால் நீரே ஆள்க' என்று நயம்படக் கூறித் தாமே அமைச்சராக இருந்து ஆட்சி மேற்கொண்டார்.

இப்பேரரசனது வீரப்புகழின் ஒலி, எதிரொலி, சங்க காலத் தமிழகமெங்கும் அதிர்வுறச் செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. தகடூர் எறிந்த என்ற அவன் பட்டம், இதைக் காட்டுகிறது. ஆனால், நமக்கு அதனினும் இனியதொரு பண்பு சான்ற நிலவொளிக் காட்சியைக் சங்கப் பலகனி காட்டுகிறது.