உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
214 ||

அப்பாத்துரையம் - 14



||- இப்பேரரசன் காலத்திலேயே அது பெருகியிருந்தது. ஏனெனில், அம் மேலாட்சி நேரடியாட்சி போன்ற ஆற்றலுடையதாய் இருந்தது. இதனைப் புலவர்களின் பாடல்கள் காட்டுகின்றன. ஆயினும், இப்பேரரசன் போர்களிடையே நாம், விச்சிப் போரையும் புன்னாட்டுப் போரை உள்ளடக்கிய சோழப் பெரும் போரையும் மட்டுமே விளக்கமாகக் கேள்விப் படுகிறோம்.

முந்திய பேரரசன் காலம் வரை வெல்லப்படாமல் இருந்த பண்டைத் தென் கொங்கு அல்லது இன்றைக் கொங்கு நாட்டுப் பகுதியாக, இவன் ஆட்சித் தொடக்கத்தில் இன்று திருச்சிராப் பள்ளி மாவட்டப் பகுதியாயமைந்துள்ள பச்சைமலை யடுத்த விச்சிநாடு அமைந்திருந்தது. சோழ பாண்டியர் ஆகிய இருவருமே உதவிய நிலையிலும் இவ்வேள்புலத்தையும், அதற்குரிய புகழ் சான்ற ஐந்தெயிற் கோட்டையையும் பேரரசன் இளஞ்சேரல் இரும்பொறை வென்று கைக்கொண்டான் என்பது மேலே கூறப்பட்டது.

சேரமரபின் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் காலத்தில் மேல்கொங்கு நன்னன் புன்னாட்டு நீலக்கல் வளமவாவி எதிர்த்ததும், கொங்குச் சேரப் பேரரசன் துணையுடன் சேரரால் நன்னன் கீழடக்கப் பட்டதும், கொங்குச் சேரர் மேலாட்சிக்குரியவராக்கப் பெற்றதும் மேலே குறிக்கப் பட்டுள்ளன. அது போலவே, சோழன் பசும்பூட் சென்னியின் படைத்தலைவனாயிருந்த வேள் பழையன் அதே நோக்குடன் புன்னாட்டின் மீது படையெடுத்தபோது நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்ற கொங்குப் பேரரசின் மேலாட்சிக்குரிய வேளிர் ஐவரும் பழையனைத் தாக்கிப் போரில் கொன்றழித்துப் புன்னாட்டைக் காத்ததும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

தன் வீரப் படைத்தலைவன் பழையனின் தோல்வியும் மாள்வும் சோழன் பசும்பூட் சென்னிக்குப் பெருந்தலை யிறக்கத்தையும் கடுஞ் சீற்றத்தையும் விளைவித்தன. அவன் காங்குப் பேரரசன் இளஞ்சேரல் இரும்பொறை மீது பழிவாங்கும் எண்ணத்துடன் (தற்காலக் குழுமமே என்று கருதப்படுகிற) கழுமலம் என்ற வேள்புலத்தைத் தாக்கி, அதன்