உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
226 ||

அப்பாத்துரையம் - 14



||-


கொண்ட பஃறுளி யாற்றுத் தென் மதுரையில்) அமைந்திருந் தாலும், அது அம் மதுரைக்கோ, பாண்டி நாட்டுக்கோ மட்டும் உரியதன்று; மூவரசுகளையும் எண்ணற்ற வேளரசுகளையும் உட்கொண்ட பண்டைப் பெருந் தமிழகத்துக்கும், அதற்கு அப்பால் உள்ள தமிழுலகம் முழுமைக்கும் உரியதாகும். இன்றைய கேரள மாநிலம், கன்னட துளு ஆந்திர மாநிலப் பகுதிகள், பண்டைத் தமிழ் ஈழமாகிய இன்றைய சீர் இலங்கை ஆகிய பரப்புகளிலும் அவற்றுக்கு அப்பாலுமிருந்து தமிழ்ப் புலவர்கள் அதில் வந்து கலந்துகொண்டிருந்தனர். பாடியவர்கள், பாடப் பெற்றவர்கள் இப் பரப்பு முழுமைக்கும் உரியவராயிருந்தனர்-எந்த ஒரு நாடோ, அரசோ, நாட்டுப் பகுதி அரசுப் பகுதிகளோ, எந்த ஒரு மாவட்டமோ வட்டமோ, எந்த ஒரு நகரமோ, முக்கியமான ஊரோ, ஊர்ப் பகுதியோ, தெருவோ கூட சங்கப் பேராண்மை பெறாமல் விடப்பட்டிருந்ததென்று கூற முடியாது. தவிர, இந்திய நாகரிகப் பரப்பு முழுவதிலுமுள்ள சமகாலச் செய்திகள், நிகழ்ச்சிகள், மக்களறிந்த பழமொழிகள், பாரத இராமயணக் கதைகள், சமயக் கருத்துக்கள் ஆகிய யாவும் இத் தேசிய இலக்கியக் களஞ்சியத்தில் வாய்மையுறப் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இறந்துபட்டவை, சிதைந்தவை, தொகையுட் சேராதவை ஆகியன போக நம்மிடம் அரைகுறையாக வந்து எட்டியுள்ள சங்கத் தொகுப்புகளுக்குள்ளேயே நமக்கு 600 க்கு மேற்பட்ட புலவர்களின் ஆயிரக்கணக்கான பாட்டுகள் கிடைக்கின்றன. இவற்றுள் கொங்கு நாட்டில் மட்டும் 30க்கு மேற்பட்ட புலவர்கள், கொங்கு நாட்டுப் பண்டைத் தலைநகராகிய கருவூரில் மட்டும் 11க்கு மேற்பட்டவர்கள் இடம் பெறுகின்றனர்.பெண்பாற் சங்கப் புலவர்களும் 30 க்கு மேற்பட்டவர்கள் ஆவர். இவர்கள் ஒப்புக்கு அல்லது பெயருக்குப் பெண்பாலராகக் கூறத் தக்கவர்கள் அல்லர். அவர்களிடையே ஆண்பாற் புலவர்களின் முன்னணித் தலைவர்களுடன் தலைவர்களாக இயங்கும் ஆற்றலுடைய கொங்கு நாட்டுக் கவிப் பேரரசி ஒளவையார், காக்கை பாடினியார் (இருவர்) போன்ற பெருங்கவிஞர் இருந்தனர்.ஆண் பெண் இருபாலரிடையேயும் எல்லா இடப் பரப்புக்கும் உரியவர்கள் மட்டுமன்றி, அரசர் முதல் ஆண்டி வரை