உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 229

(

படராலமரம் போன்ற அமைப்பு, அதற்குரிய மரபுவழி அமைப்பாண்மை, அமைப்பாட்சி ஆகியவற்றை உடையதாக இருந்தது என்பது தெளிவு.

மூன்றாவதாகச் சங்கமரபில் நாம் குறிப்பிடத்தக்க செய்தி, சங்கப் பலகணி மூலம் நாம் காணத்தகும் வேள்நாடுகள் கடந்த, அரசு நாடுகள், மண்டலங்கள் கடந்த, தமிழுலகின், தமிழுலக மக்களின் தேசியங் கடந்த பெருந் தேசிய வாழ்வின் கலைவளமும் அறிவு வளமும் அவற்றிற்குரிய சங்க அமைப்பாண்மையின் தனிச் சிறப்பியல்புகளும் ஆகும்.

செக்கோசிலவாக்கிய நாட்டுத் தமிழறிஞரான கெமில் சுவெலெபெல் தம் சங்க இலக்கிய ஆய்வு மூலமே மேற்கண்ட சங்க இலக்கியத்தின் உயரிய கலைப் பண்புத் திறம் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். அதே சமயம் அவர் அச் சங்க இலக்கியப் பலகணி மூலம் தாம் காணும் தமிழர் சமுதாய வாழ்வின் எளிமைத் தரத்துடன் அந்த உயர்ச்சி முற்றிலும் முரண்பட்டு, சூழ் தமிழினத்திடையே ஓர் உயரிய அயல் தமிழின அமைப்புப் போலக் காட்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார். இங்கே அவர் நோக்கின் முற்பகுதி மெய்ம்மை கண்ட துணிவும் கூர்மையும் உடையதாயினும், அதன் பிற்பகுதி மெய்ம்மையினை முற்றிலும் விளக்க முற்படாமல், ஒரு விளங்காப் புதிராகவே விட்டுச் சென்றுள்ளது. உண்மையில் சங்கப் பலகணி காட்டும் தமிழக வாழ்வின் எளிமை புலவர் கவிதைக் காட்சியின் எளிமையேயன்றி, மக்கள் அரசியல், சமுதாய, பொருளியல். கலையறிவுத்துறை எளிமையன்று. இது கீழே விளக்கப்படுகிறது.

தமிழரின் முச்சங்க மரபு, நாம் அறியும் தமிழரின் கடைச் சங்க மரபினும் பழமையானது, விரிவானது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சிலம்பு மூலமும் அதன் உரைகள் மூலமும், கொங்குத் தமிழக வள்ளல் மகாலிங்கம் போன்றோரின் முயற்சியால் வெளிவந்துகொண்டிருக்கும் பண்டை இசை நாடக நூல்கள் மூலமும் நாம் அறிந்துகொண்டுவரும் முத்தமிழ் மரபு அதனினும் பழமையானது, பாரியது, சீரியது ஆகும். அணிமைக் காலங்களிலேயே அழிந்து வந்துள்ள இம்மரபுகள் கடைச்சங்க காலத்தில் உயிர்மரபுகளாகவே இருந்தன. புலவர்களில் பலரும்