உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
232 ||

அப்பாத்துரையம் - 14



||-


‘விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்’

‘அறிதோற றியாமை கண்டற்றால்’

என்பன போன்ற வள்ளுவ வாய்மொழிகள் காட்டும். தவிர, நாகரிக உ உல கெங்கும் அணிமைக் காலம் வரை கல்வி என்பது தனி மனிதர் கல்வியாக (Learning) மட்டுமே அமைந்திருந்தது, தேசியக் கல்வியாக (National Education) இருந்ததில்லை. ஆனால், திருவள்ளுவர் கல்வியைத் தேசியக் கல்வி, தேசிய வாழ்வை இலக்காகக் கொண்ட இனக் கல்வியாகக் கருதியதனால்தான் கல்விக்குரிய நான்கு அதிகாரங்களையும் கல்விமுறை என்றும், கல்லாமை ஒழிப்பு என்றும், கேள்வியால் பொது மக்களிடையே அறிவு பரப்பும் மக்கட் கல்வி என்றும், அறிவுடைமை அதாவது எல்லா உடைமைகளுக்கும் அடிப்படையான ஆட்சி தொழில் துறைகள் சார்ந்த அறிவுக் கல்வி என்றும் வகுத்து, அத்தேசியக் கல்வியை அறத்துப்பாலிலோ, பொருட் பாலின் குடியியலிலோ கூறாமல், இறைமாட்சி அதிகாரத்தினை அடுத்து இறைக் கடமைகளில் முன்னணிக் கடமையாக வைத்தார் என்பது காணலாம்.

சங்க இலக்கியம், கல்விப் பெருமை கூறிற்றேயன்றி, இக் கல்வி யமைப்புகள் பற்றி எதுவும் கூறவில்லை. இது இயல்பே. ஏனெனில், சங்கத்துக்குப் புறம்பாக அத் தகைய அமைப்புகள் இல்லை, இருந்திருக்கவும் முடியாது. ஏனெனில், தமிழகத்திலும் சூழ் புலங்களிலும்கூட அந் நாட்களில் மூவரசு நாடுகள் மூன்றாகவும், வேள்புல நாடுகள் எண்ணற்றவையாகவும் இருந்தன. ஆனால், தமிழுலகின் ஒரே தேசிய மரபாகத் திகழ்ந்த தமிழ்ச் சங்கத்துக்கு வெளியே, ஓயாது செங்குருதிப் போராட்டங் களிலேயே ஈடுபட்டிருந்த தமிழக அரசுகளுக்கோ, வேளிருக்கோ கூட, இத்தகைய உலகளாவிய, தேசமளாவிய ஆக்கச் செயல்களுக்கோ, அமைப்புகளுக்கோ, திட்டங்களுக்கோ உரிய நேரமும் வாய்ப்பும், திட்ட வாய்ப்பும் அதற்குரிய சிந்தனையும் கட்டாயமாக இருந்திருக்க முடியாது.

செக்கோசிலவாக்கிய அறிஞர் கெமில் சுவெலெபில் கண்ட இருதிறக் காட்சிப் புதிர் இதுவே. ஆனால், இந்தப் புதிரின்