உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{block_center|



தமிழ்மயமாய் வாழ்கின்ற தவப்புதல்வ !

ஆங்கிலத்தைத் தமிழாக்கி அவர்வகுத்த
அகராதி மொழிபெயர்ப்புத் துறையினிலே
பாங்காக நுழைகின்ற பைந்தமிழர்
அனைவருக்கும் உண்மையிலே கையகராதி.
பலமொழிகள் உலவிவரும் பரதநாட்டில்
அறிஞர்களை அயர்விக்கும் மொழிச்சிக்கல்
கலகங்கள் தீர்ப்பதற்கு முன்னமவர்
ஆங்கிலநூல் இயற்றிவைத்த தீர்க்கஞானி.
சமயங்கள் கடந்தபெரும் தத்துவங்கள்
சாரமாய்த் தருகின்ற சிந்தையாளர்
இமயத்தைக் கடந்துதமிழ் பரவுவதற்கு
இன்பவாழ் வனைத்தையும் துறந்துவிட்டார்
பன்மொழிகள் கற்றபெரும் பயனையெல்லாம்
பைந்தமிழின் புகழ் பரப்பச் செலுத்துகின்றார்
தமிழ்மயமாய் வாழ்கின்ற தவப்புதல்வ
நலம்பெற்று வளம் பெற்று நீடுவாழி!

– இ. சு. முத்துசாமி, எம்.ஏ., பி.டி.,

தமிழ்மண் பதிப்பகம்

2, சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி : 9444410654