உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 15

தமிழர் மிகுதியாக உள்ளனர். இவ்வூரில் சாக்கையர் குடியினர் இன்னும் இருக்கின்றனர். இன்றும் சாக்கைக் கூத்தைக் கோவில்களில் பொதுவாகவும் திருவாங்கூர் அரசின் தலைமைக் கோவிலாகிய திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயிலில் சிறப்பாகவும் ஆடுகின்றனர். இதற்காக அரசியலாரிடமிருந்து அவர்கள் மாதச்சம்பளமும் பயணப்படியும் மானியங்களும் பெற்றுள்ளனர். இன்று அவர்கள் ஆடும் சாக்கைக் கூத்து இராமாயணக் கதையையே நடித்துக் காட்டுவதால் அஃது, “இராமனாட்டம்” என்று வழங்கப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டு வளர்ச்சி

திருவாங்கூர் அரசர் பண்டைய சேரர்குடியின் ஒரு கிளை மரபினர் என்று கருதத்தக்கவர். சேரன் செங்குட்டுவன் காலத்திலிருந்து இன்றுவரை சேரர் கலை மரபு குலையாமல், செங்குட்டுவன் முன் சாக்கைக் கூத்தாடிய அதே ஊரின் அதே குடும்பத்தினர் இன்றும் அக்கிளை மரபினர் பணியில் நின்று நாட்டுத் தலைமைக் கோவிலில் ஆடிவருகின்றனர் என்பது வியப்புக்குரிய செய்தியேயாகும்!

தமிழ் நாட்டிலும் இதே சாக்கைக் கூத்து ஆயிரக்கணக்கான ண்டுகளாகத் தமிழரசர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தது என்பதற்குச் சோழப் பேரரசர் காலச் சான்றுகள் உள்ளன. முதலாம் இராசேந்திர சோழன் அல்லது கங்கை கொண்ட சோழனுடைய கல்வெட்டு ஒன்று உடையார்பாளையம் வட்டத்தில் காமரசவல்லி என்னும் ஊரிலுள்ள சிறந்த சாக்கை நடிகன் ஒருவனுக்குச் சோழ மன்னன், ‘சாக்கை மாராயன்' என்னும் சிறப்புப் பட்டம் வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது.

சிலப்பதிகாரம் ஒரு சாக்கையர் கூத்து நாடகமே

சிலப்பதிகாரத்துக்கு முன்னிருந்தே சாக்கைக் கூத்தும் பிற கூத்து வகைகளும் மலையாள நாடு உட்பட்ட பண்டைத் தமிழகமெங்கும் வழக்கிலிருந்து வந்தது. செங்குட்டுவன்முன் சாக்கையன் ஆடிய கூத்து சிவபெருமான் உமையவள் காண நின்று ஆடிய "கொட்டிச் சேதம்" என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. ஆனால், சிலப்பதிகாரமும் கண்ணகி விழாவிலோ