உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

5.

6.

அப்பாத்துரையம் - 15

நாடகம் என்ற வகையில் இதைவிடச் சிறந்து மக்கள் உள்ளம் தடவும் முறையை யாரும் எண்ணிப் பார்க்க முடியாது.

சிலப்பதிகாரம் குறவர்கள் மனக் கண்முன் ஆர்வக் கற்பனையால் கண்டு கூறிய நிகழ்ச்சியை மய்யமாகக் கொண்டு, சமயவாதியாகிய கூலவாணிகன் சாத்தனார் அவதாரக் கதைகளை இணைத்து, இவற்றுக்கு இணங்கவே கதைப் பின்னணியை உருவாக்கிக் காட்டுகிறது.

தமிழகத்தில் சாக்கைக் கூத்தும், நாடகமும் தடமற அழிந்த பின்பும் கோவலன் கண்ணகி தெருக்கூத்தாகவும், மக்கள் நாடகமாகவும் நம் காலம்வரை நீடித்து நிலவி யுள்ளது. இதை நோக்க, அது தொடக்கத்தில் சாக்கைக் கூத்தாக நடிக்கப்பட்டு, அக் கூத்து வழக்கிறந்தபின், வெறும் கதை நாடகமாகப் பயின்றிருத்தல் வேண்டும் என்று எண்ண இடமுண்டு.

கடைசியாகத் தமிழகம் சிலப்பதிகாரக் கதையையும், லக்கிய மரபையும் நமக்குப் பேணித் தந்தாலும் சாக்கைக் கூத்தைத் தரவில்லை. ஆனால், மலையாள நாடு சிலம்புக் கதையையும், காவியத்தையும் மறந்து விட்டது. சாக்கைக் கூத்தை மட்டும் அழியவிடாமல் காத்து வளர்த்துத் தந்துள்ளது.

மேற்கூறியவற்றால் பண்டை முத்தமிழ்க் கலையாகிய சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் காலத்தில் அரசவையிலும் கண்ணகி கோவில்களிலும் மக்கள் மன்றங்களிலும் நடிக்கப்பட்டு வந்த ஒரு சாக்கைக் கூத்து நாடகமே என்றும், தமிழகம் கலை தேயக் கதையை நமக்குத் தந்ததுபோல, மலையாள நாடு கதை தேயக் கலையை நமக்குத் தந்துள்ளது என்று காணலாம்.

சாக்கையர் கூத்து, தமிழகத்தின் மிகப் பழைமையான துன்பியல் நாடகம் அல்லது வீறியல் நாடகம். அது சாந்திக்கூத்து அல்லது அகக் கூத்தின் ஒருவகை. இதற்கெதிரான மற்றொரு வகை வினோதக் கூத்து. இது புறக்கூத்தின் ஒரு வகை. இதுவே மலையாள நாட்டின் ஓட்டந் துள்ளலாய் வளர்ந்திருத்தல்