உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

87

அரசன்

சாமூதிரி மிகுதியாய்க் காட்டினான். அவன் தன் அரசியல் எதிரிக்கு முறைப்படி குழுவை அனுப்பியுதவ மறுத்துவிட்டான். அதனால் கோட்டயத்து மனத்தாங்கலுற்ற கண்ணனாட்டக் குழுவுக்குப் போட்டியாகப் புதிதாக இராமனாட்ட மொன்றும், இராமனாட்டக் குழுவொன்றும் அமைத்தான். இதன் புகழ் நாளடைவில் கண்ணனாட்டத்தின் புகழை மங்கவைத்தது.

சமற்கிருத நாடகத்தில் அமைந்த விகடங்களுக்கு இராமனாட்டம் இடம் தந்தது. இராவணன், கும்பகர்ணன் ஆகியவர்களுக்குத் துணை நடிகர் அமைந்து, தனி ஆடையணி மணியுடன் அவர்கள் நகைச்சுவைக்கு இடமளித்தனர். மக்களிடையே இதன் வளர்ச்சி இராம நாடகம் போல இராவண நாடகம் என்ற முறையில் வளர்ந்தது. ஆயினும் கோவில், அரசியல் ஆதரவு பெற்ற இராமனாட்டம் இன்றுவரை தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது.

சாக்கையர் கூத்தின் மரபில் வந்த இராமனாட்டத்தில் ஒரு பகுதியாகவே "கதைகளி” வளர்ந்துள்ளது. அதன் தனி வளர்ச்சி அணிமைக் காலத்தது.சென்னை அரசியலில், மலையாள மொழி சார்ந்த அரசியல் உரிமை பெற்றுள்ள புலவரான வள்ளத்தோள் என்ற கவிஞர் இதைத் தற்காலத்துக்கேற்றதாக வளர்ப்பதில் ஈடுபட்டு அதன் புகழை நாடெங்கும், உலகெங்கும் பரப்பியுள்ளார்.

66

‘கதைகளி” வளர்ச்சியின் வரலாற்றைப் பற்றித் திருவாங்கூர் அரசியலார் வெளியிட்டுள்ள ஒரு சிற்றேடு, சிலப்பதிகாரக் காலம் முதல் இன்று வரை உள்ள அதன் வளர்ச்சியையும் அதன் கலை, கைத்தொழில் ஆகியவற்றையும் விவரிக்கிறது. அதில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகளை அது வகுத்து நூற்றுக்கு மேற்பட்டவை இன்றும் வழக்கிலிருப்பதாகக் குறிக்கிறது. தமிழில் சங்ககால வழக்கிலிருந்த பல கருவிகளின் பெயர்கள் அதில் காணப்படுகின்றன.

பண்டைக்கேரளத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட கருவிகள் இருந்ததாக அச்சிற்றேடு குறிக்கிறது. அவற்றின் பட்டியல் ஒன்றும் தருகிறது. இப்பெயர்கள் பண்டைக் கேரளத்தின் மலையாள இலக்கியமாகிய சிலப்பதிகாரத்திலுள்ளது என்று அந்நூல் குறிக்கிறது.