உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் – 15

போற்றும் சிலர் இந்த மூவருமில்லையென்றால் வேறு யார்? மூவர் கருத்துக்கும் அப்பாற்பட்ட வேறுபாடுடையவரா? மூவர் கருத்துகளுக்குள்ளும் தான் வேறுபாடுகள் அனைத்துக்கும் பிரதிநிதித்துவம் ஏற்பட்டாய்விட்டதே!

தமிழக ஆராய்ச்சிப் போக்கின் புதிர் இத்தகைய புரியாச் சூழலில்தான் உள்ளது. அஃது எவ்வாறு சிலம்பின் புகழை, பயனைப் பாதிக்கிறது என்று காண்போம். சிலப்பதிகாரத்தைப் போற்றும் திரு.ஆர்.கே.சண்முகம், இராவ்பகதூர் எஸ்.வையா புரிப் பிள்ளை, திரு.வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எவ்வளவு வேறுபாடுடையவராயிருந்தாலும் அவர்களை ஒருமுகப்படுத்திப் 'போற்றும் சிலர்' என்று குறிக்கப் பட்டவரிடமிருந்து அவர்களைப் பிரிக்கத்தக்க ஓர் அடிப்படை இனப் பாகுபாடு இருத்தல் வேண்டும் என்பது தெரியவருகிறது.

அது யாது?

தனால்

இது சிலப்பதிகார இலக்கிய நயம் பற்றியதன்று. மூவருமே அதை உச்சி மேற்கொண்டு போற்றுபவர் ஆவர்.

அது கால ஆராய்ச்சி பற்றியது, சிலப்பதிகாரத்தின் வரலாற்றுண்மை பற்றியது என்று கூறத் தோற்றும். ஏனெனில், பேராசிரியர் திரு.வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் ஆராய்ச்சிக்கு இராவ்பகதூர் எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்னுரை தந்ததும், இராவ் பகதூர் கருத்துகளைப் பேராசிரியர் மேற்கோள் காட்டியதும் இவ்வகையிலேயே.

திரு.ஆர்.கே.எஸ். கால ஆராய்ச்சி, வரலாற்றுண்மை ஆகியவற்றில் கருத்தே செலுத்தவில்லை. இலக்கிய நய ஆய்வுடனேயே நின்றார். ஆனால், திரு.வி.ஆர்.தீட்சிதர் கால ஆராய்ச்சியிலும் வரலாற்றுண்மையிலும் இராவ்பகதூர்க்கும் பேராசிரியர்க்கும் முற்றிலும் மாறுபட்டவர். ஆகவே, கால ஆராய்ச்சி, வரலாற்றுண்மை ஆகியவை நீங்கலாக மேற்கூறிய மூவரையும் போற்றும் சிலரிடமிருந்து விலகி நிற்க வைக்கும் பண்பு வேறு இருத்தல் வேண்டும்.

சிலப்பதிகாரத்தைத் தமிழர் பண்பாட்டுக்குரிய நூல், தமிழர்க்குப் பெருமை தரும் நூல் என்று போற்றும் சிலர்