உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

அப்பாத்துரையம் - 15

குழுவும் அறிஞர் உலகிலோ, பொது மக்களிடையிலோ செல்வாக்கற்றவையே. ஆனாலும், இருவேறு வகையில் வருங்காலத் தமிழகத்துக்கும் வருங்கால உலகத்துக்கும் தெரிந்தும், தெரியாமலும், குந்தகம் விளைவிக்கும் போக்குகளே உடையவையாயிருக்கின்றன.

மறுப்புக்குரிய மூன்று காரணங்கள்

புறக்கணிப்புக் குழு பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்கள், அரசியல் அரங்கங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆட்சிக் குழுவினரை மறைத்து நின்று இயக்கும் ஆற்றல் படைத்ததாகவே இருந்துவருகிறது. ஏற்கெனவே அது தமிழகத்தின் மெய்ம்மைகளும், மெய்ப்புகழும் உலகுக்குத் தெரிய வாராமல் மறைக்கும் சீரிய பணியைத் திறம்படச் செய்துவருகிறது. தமிழர் வரிப்பணத்தைப் பயன்படுத்தித் தமிழர் கல்வியின்மை, அறியாமை, மடமைகளை மைகளை முதலீடாக முதலீடாக வைத்து, அயல் பண்பாடுகளை வளர்த்துவருகிறது. சிலப்பதிகாரத்தின் மெய்ப் பெருமையை மறைத்தாலன்றி இந்த அயல் பண்பாட்சியை நீடித்துப் பேண முடியாது என்பதை அது கண்டு கொண்டுள்ளது, கண்டு கொண்டு வருகிறது.

நோக்கத்தில் தூற்றுதல் குழு புறக்கணிப்புக் குழுவுக்கும் நேர்மாறானதே.ஆனால், அது கலைப் பண்பற்றது.பொதுமக்கள் உள்ளத்திலே அயல் பண்புகளையும் கலைப் பண்புகளையும் பிரித்தறியமாட்டாமல் ஒன்றுபடுத்திக் குழப்பி, தெரிந்தும் தெரியாமலும் அயல் பண்புகளை வளர்த்துத் தமிழ்ப் பண்பின் எதிரிகளிடமே மக்கள் உள்ளத்தை ஒப்படைத்துவிடக் காரணமாகியுள்ளது.

மேற்கூறிய மூன்று காரணங்களும் இல்லை என்றால் சிலப்பதிகாரத்தின் எதிர்ப்புக்கு மறுப்புக் கூறவேண்டிய தேவையே ஏற்பட்டிராது. இஃதை அவர்களும் அறிவர். ஏனெனில், இதுவரை இந்த இரு சாரார்க்கும் ஆட்சிக்குழுவிலும், மக்கள் மன்றத்திலும் பதவிகள் கிடைத்தனவேயொழிய, தமிழ்பற்றிப் பேசும் உரிமையும் கிடைத்ததில்லை; அவர்கள் பேசியதை எவரும் கேட்கவோ, மறுப்புக் கூறவோ எண்ணியது மில்லை. ஆனால், பொருந்தாத் தலைகளைப் பொருத்த முயன்ற