உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

109

ஆனால், பழம் பேரறிஞர்களுள் பலர் நம் உலகை விட்டு அகன்றுள்ளனர். மீந்தவர் ஒளிகள்கூடப் பெரியார் ஈ.வே.ரா.வை இப்போது தீண்டுவதில்லை. அத்துடன் தமிழகத்தின் அறிவு, கலை, தொண்டு ஆகிய மூன்றின் இணைக் கூட்டாக எழுந்துள்ள புத்திள ஞாயிறாகிய கலை அறிஞர் சி.என்அண்ணா துரையைச் சுற்றி அவை சுழல்கின்றன. இந்நிலையில்தான் பெரியார் ஈ.வே.ரா. அறிவுத் தோழமையும், கலைத் தோழமையும் அற்ற வெற்று அரசியல் தலைவராய், புலமைப் பிரதிநிதித்துவம், மக்கள் பிரதிநிதித்துவம், மக்கள் தொடர்பு ஆகியவை அற்ற தலைவராய், சிலம்பின் ஒளி நிழல் கூறுகளை விரித்தறிய முடியாத மயக்க நிலைக்கு ஆளாக நேர்ந்தது.

கதிரவனின் ஒளியன்று என்ற காரணத்தால் நிலவு இருளாய் விடாது. அது போல, வறண்ட பகுத்தறிவு நூலன்று என்ற காரணத்தால் கலைப்பெரு நூலான சிலப்பதிகாரம் அதற்கு மாறான மருள் நூலாய்விடமுடியாது. அஃது அறிவோடு கூடிய கலை நூல், அதாவது அருள் நூலேயாகும்.

இங்ஙனம் அறிஞர், கலைஞர் ஆதரவற்ற பெரியார் ஈ.வே.ரா. அறிஞர் உலகிலோ, கலை உலகிலோ, இருசாரார் உளத் துடிப்பினாலும் அதிர்வுறும் மறுமலர்ச்சிக் காலத் தமிழ்ப் பாதுமக்களிடையிலோ முற்கொண்டிருந்த செல்வாக்கை இழந்தவராகியுள்ளார். அவர் ஆதரவு இன்னும் ஒரு பேராசிரியரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திவைக்கப் போதியதே யானாலும், அத்தகையவர் அறிவுக்கு வலுத்தருவதிலோ, அதற்கு விளக்கம் அளிப்பதிலோ அஃது இன்று செயலற்றதாகியுள்ளது.

இராவ்பகதூர்கள் அருளிரக்கத்தாலோ, பெரியார்கள்

மக்கள்

ஒரு

ஆதரவாலோ பேராசிரியர் பெறாதுபோன அறிமுகத்தைத்தான் இள ள எழுத்தாளர்களிடையே முழுநிலாப்போன்று நிலவும் கவிஞர் கண்ணதாசன் அவர்களை எதிர்ப்பதன் மூலம் அவர் அடைய முற்பட்டுள்ளார் எனலாம்.

செட்டிநாடும், தமிழும்

காங்கிரசு போன்ற அகில இந்திய அரசியலியக்கங்களும், பிரமஞான சங்கம் போன்ற உலக ஆன்மிக இயக்கங்களும் தமிழகத்தில் வீசிய காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்.