இன்பத்துள் இன்பம்
145
தருவதில் நான் மேற்கொண்ட முயற்சியின் அருமையையும் நீங்களே பார்த்தீர்கள்! அறிவில் சிறந்த இந்த அவையோர் எல்லாரும் ஆவலுடன் கண்கொட்டாது பார்த்துக்
கொண்டிருந்தார்கள்...!’
அது அரசவை என்பதைக்கூட மறந்து ‘ஆகா,ஆகா!' என்று ஆர்ப்பரித்தனர், அமைச்சர் உட்பட அவையோர் எல்லாரும்! ‘மன்னர் மன்னனே! முழுதும் கேட்காமலே எல்லாரும் இவ்வளவு பாராட்டுகிறார்கள். முழுதும் கேட்டால்...!?
இவ்வாய்த்திறம் ஆரவாரத்தை இன்னும் பெருக்கிற்று. ஆனால், மன்னன் கையமர்த்தினான்.
'முழுதும் கேட்ட பிற்பாடு சிரிப்போம். இப்போது சிரிக்கவேண்டாம்! திரு, நீ இனி உன் முழுப் பேருரையையும் ஆற்றலாம்!' என்றான்.
'ஆண்டவனே, எளியேன் சிற்றுரைக்கும் சிறு மூளைக்கும் வ்வளவு மதிப்புத் தந்துவிடக்கூடாது!' ஏதோ நான் தங்களிடம் கொண்ட ஆர்வ மதிப்புத்தான் என்னை இவ்வளவு சிந்திக்க வைத்துள்ளது.
"பொன்னும் மணியும் விலையுயர்ந்தவை. ஆனால், அவற்றை மன்னர் தம் பின்னோர்களுக்கு விட்டுச் செல்லலாம். தாமே துய்க்க முடியாது. மானும் மயிலும் குயிலும் அப்படியே! அவை நீடித்து இன்பம் தரமாட்டா. மலர்கள் கனிகள் துய்ப்பதற் குரியவை. ஆனால், மலர்கள் வாடிவிடும். கனிகள், இனிய உண்டிகள் முதலில் இனிக்கும், பின் புளித்துப்போகும். விரைவில் கெட்டுவிடவும் செய்யும். ஆனால், நான் கொண்டு வந்த பழம்..."
'ஆம், புளியம்பழம்கூட ஒரு பழம்தான்!' என்று பின்னிருந்து கீச்சிட்டது ஒரு குரல்.
திருவளர்த்தான் தொடர்ந்தான்.
'ஆம், இதுதான் பழங்களில் சிறந்த பழம். மற்றப் பழங்கள், இன்பங்கள் முன் இனிக்கும், பின் புளிக்கும். இது முன் புளிக்கும், பின் இனிக்கும். இது வாடாது, வதங்காது அழுகாது, கெடாது. நாட் செல்லச்செல்ல மேலும் மேலும் இனிக்கும். வாயிலிட்டவர்