இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148
அப்பாத்துரையம் - 15
இன்பம் என்று உயர்ந்துசெல்லும் வழிகளை-குற்றவாளிகளுக்கு மட்டுமின்றிப் பொது மக்களுக்கும் அறிவிப்பதேயாகும்.
அன்புவழி நின்று அவ்வின்பத்துள் இன்பம், இன்பத்தில் உணர்விழந்த நிலை அதாவது தெவிட்டாத இன்பம், இன்பத்தின் மேல் இன்பமாகிய பேரின்பம் விளக்கும் ஒப்பற்ற இன்பநூல் வள்ளுவர் பொய்யா மொழியேயாகும். அதன் உட்கோள்கண்டு, இன்பத்துள் இன்பம் நுனித்துணர்வோமாக.