164 ||.
அப்பாத்துரையம் - 15
குடும்பத் தலைமுறை யிலேயே இவ்வலைகள் பலவாகி, பலகுடும்ப அலைகளுடன் அளாவிப் பல குடும்பங்களையும் குடும்ப அலைகளையும் உண்டுபண்ணுகின்றன. இவ்வாறு இனவாழ்வின் அலைகள் ஒரே தொடர் அலைத்தொகுதி அல்ல. கிளைத்துப் பல்கி இணைந்து செல்லும் அலைத் தொகுதிகள் அல்லது அலைப் பின்னல்களேயாகும். பின்னல்களின் கண்ணிகள் இறப்பும் பிறப்புமல்ல. பழையமுறை என்பது இங்ஙனம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயுள்ள அலையன்று. ஒரு தலைமுறை மணவாழ்லிருந்து மறுதலைமுறை மணவாழ்வு வரைக்குமுள்ள அலை அல்லது அலைகளேயாகும்.
திருவள்ளுவர் உறக்க உவமையின் முழுநிறை பொருத்தம் இப்போது ஓரளவு விளக்கமடைகிறது. ஒருவன் வாழ்நாளில் உறக்கம் விழிப்பு நிகழ்வது எப்படியோ அப்படித்தான் இனவாழ்வில் மட்டுமன்றித் தனிமனிதன் வாழ்விலும்கூடப் பிறப்பு இறப்புகள் நிகழ்கின்றன. இறப்பும் பிறப்பும் ஒருவன் தலைமுறையின் தொடக்கத்திலும் இறுதியிலும் நிகழவில்லை. இரண்டும் அவன் கண் காண, அவன் தலைமுறையிலேயே நிகழ்கின்றன. தான் பிறப்பதைத் தான் அவன் காணவில்லை. தான் இறப்பதைத் தான் அவன் காணமுடியாது. ஆனால், அவன் வாழ்விலேயே அவன் தாய் தந்தையர் வாழ்விறுதிக்குரிய இறப்பு நிகழ்ச்சிகளையும், அவன் பிள்ளைகள் வாழ்வுத் தொடக்கத்துக் குரிய பிறப்பு நிகழ்ச்சிகளையும் அவன் காண்கிறான். அதாவது மனிதன் தன் தனி வாழ்விலேயே தன் தலைமுறைக்குரிய இறப்புகளையும் பிறப்புகளையும் ஒருங்கே காண்கிறான். தான் இறந்து உறவினர் அழுவதைக் கனவில் கண்டு வருந்தும் கனவாளன் நிலையே இங்கு மனிதன் நிலை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கனவில்கூட ஒருவன் இறப்பை மட்டுமே காணமுடியும். இங்கோ மனிதன் இறப்பையும், பிறப்பையும் காணமுடிகிறது! திருவள்ளுவர் குறட்பாவில் உறக்க விழிப்புவமை சுட்டிக் காட்டும் அருநயம் இதுவேயாகும்.
உயிரின வளர்ச்சியில் தனி உயிர் வாழ்வு ஒரு முமு அலையாயிருக்கும் நிலை ஒன்று உண்டு. அதுவே தொடக்க நிலை உயிரினங்களான அணு உயிர்களின் நிலை. இங்கே ஒரு தனி உயிரின் வாழ்வே ஒரு தலைமுறை. ஒரு தலைமுறை முடிவு அடுத்த