இன்பத்துள் இன்பம்
167
தளர்ச்சி என்பது வளர்ச்சிக்கு உதவும் பண்பு என்பதைத் தாமரை, அல்லி ஆகிய நீர்வாழ் நிலையுயிர்களின் வாழ்வு காட்டுகிறது.இவற்றின் அடித்தண்டு, சேற்றினுள் கிழங்கு வடிவில் கிடக்கின்றது. அதன் ஒருபுறம் எப்போதும் தளிர்த்துக்கொண்டே வளர்கிறது. மறுபுறம் சிதைந்தழிந்துகொண்டே இருக்கிறது. இவ்விருதிசை நிகழ்ச்சிகள் இந்த நிலையுயிர்களை (தாவரங்களை) மாளா உயிர்களாக்குவதுடன், உணவு குறைந்துவிட்ட இடத்தி லிருந்து புது இடத்துக்கு இடம்மாறி முன்னேறும் இயங்கும் (சங்கம) உயிர்கள் ஆகவும் செயலாற்றுவிக்கின்றன.
தளர்ச்சி உண்மையில் உணவுத் தொழிலின் கழிவுநீக்கம் போன்றது. கழிவுநீக்கம் உயிர்வளர்ச்சிக்கு வேண்டாத பொருளை ஒழித்தகற்றிப் புது ஆக்கப் பொருளுக்கு வழி வகுக்கிறது. அதுபோல, உயர்படி உயிரினங்களில் தளர்ச்சிப் பருவமே இனவளர்ச்சியில் முன்னர்ப் பயன்பட்டு மேலே தேவைப்படாத பகுதிகளைக் கழிக்கும் பருவமாகும். அத்துடன் பழைய தலைமுறை தன் வளர்ச்சியில் ஓய்வுற்ற புதிய தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவும் பருவமும் அதுவே ஆகும். ஆனால், வளர்ச்சிப் பருவத்தின் தளர்ச்சிக்கூறு நேரடியாகவே வளர்ச்சிக்கு உதவுகிறது. ஏனெனில், தளர்ச்சிப் பருவத்திலேயே இனத்தின் புது வளர்ச்சிக்குரிய ஆக்கப்பண்புகள் பெருக்கம் அடைகின்றன. இதனை நாம் சிறுதுயில் நிலையிலேயே காணலாம். விழிப்பு நிலையில் உயிர்வளர்ச்சிக்குரிய கருவித் தொழில்களில் முழுதும் ஈடுபடுகிறது. ஆனால், தளர்ச்சியின் கூறாகிய உறக்க நிலையில் வளரவேண்டிய உறுப்புகளுக்கு உயிர் ஓய்வு தந்து அவற்றை வளர்க்கின்றன. செடி கொடிகளும் உயிரினங்களும் விழிப்பு நிலையில் உண்டு செரித்த உயிர்ப்பொருளைக் கொண்டு, உறக்க நிலையிலேயே வளர்ச்சியுறுகின்றன என்று உயிர் நூலார் தேர்ந்துரைத்துள்ளனர். அதுபோலத் தளர்ச்சியும் இறப்புமே உயிர்த் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் வேண்டாதன, ஒவ்வாதன அகற்றி, வேண்டுவன, ஒத்தன, வளம் ஊக்குவன ஆகியவற்றைப் பெருக்குகின்றன.
பொதுநிலைத் துயிலைப் போலவே நீள்துயில், செறிதுயில், மணித்துயில் நிலைகளும் உயிரின வகையின் வளர்ச்சிக்கும் உயிரின வளர்ச்சிக்கும் உதவுபவை என்பது தெளிவு. அவை