இன்பத்துள் இன்பம்
177
என்பதை நிலை நாட்டுதல் முடியாது. மறுபிறப்பை ஐயத்துக் கிடமின்றி நாட்டும் குறட்பாவையும் எவரும் காட்டல் அரிது.
அவா என்பதைத் தனி உயிர் அவா என்ற பொருளில் திருவள்ளுவர் கொண்டதுபோலவே, பிறப்பு, இறப்பு என்பதையும் அவர் தனி உயிரின் பிறப்பு, இறப்பு என்று கொண்டதாகக் கருத இடமுண்டு. அவை தனி உயிரின் பண்புகள், இன்பம் நோக்காத தற்பற்றுப் பண்புகள். உயர்ந்தோர் இவற்றுக்கு மாறாக இறவாமை, பிறவாமை ஆகிய பண்புகளை உடைய இனவாழ்வையே இன்பம் நோக்கிய வாழ்வாகக் கொண்டனராதல் வேண்டும்.
‘அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.'
புத்த, சமண சமயங்களுக்கும் கீழ்த்திசைச் சமயங்களுக்கும் உரிய மறுபிறப்புக் கொள்கையின்படியே உரையாசிரியர்கள் இக் குறட்பாவுக்குப் பொருள் கண்டுள்ளனர். 'தவாஅ' என்பதற்குக் கெடுதலில்லாத என்ற சொற்பொருள் கூறி, 'கெடுதலில்லாமல் வருகின்ற, அஃதாவது ஓய்வற்ற பிறப்பு இறப்புச் சூழல் தரும் விதைப் பண்பே அவா' என்று பரிமேலழகர் கொள்கின்றார். ‘வருகின்ற' என்ற சொல்லை வருவிக்காவிட்டால் அஃது அவர் குறித்த நேர்ப்பொருள் தர முடியாது என்பது இங்கே கவனிக்கத் தக்கது.
தமிழில் பிறப்புக்கு எதிர்ச் சொல் இறப்பு, பின்னது மிகுதல், கடந்து செல்லுதல் என்னும் பொருள் உடையது. திருவள்ளுவர் பிறப்புக்கு எதிராகச் சிறப்பு என்பதையும் பயன்படுத்துகிறார். இறப்பு, சிறப்பு; தவம், தவல் என்ற சொற்கள் தமிழில் பொதுவாகவும், திருவள்ளுவர் வழக்கில் சிறப்பாகவும் தொடர்பு உடைய சொற்கள் ஆகும். இறப்பு தனி வாழ்விலிருந்து இன வாழ்வுக்குக் கடத்தலே. சிறப்பும் புகழும் எச்சமும் அதுவே. ‘தவல்’ தாண்டுதல் ‘தவம் அதற்குரிய செயல்.
"உற்றநோய் நோன்றல், உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்துக்கு உரு '
என்று திருவள்ளுவரே இதற்கு விளக்கம் அளித்துள்ளது காணலாம். புத்தர்பிரான் காலத்துக்குள் தவத்தின் இந்த