இன்பத்துள் இன்பம்
193
டால்ஸ்டாய் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்கள் இந்த உலகுக்கு உரியவர்களல்லர். அந்த உலகுக்கே உரியவர்கள். அவர்கள் கூறும் ஒழுக்கமுறை சமயவாதிகள், வைதிகர்களுக்குரியது!' இவ்வாறு சிலர் கூறுவர். 'இல்லாமையையே ஒரு போற்றத்தக்க பண்பாக்கினால், அது ஏழைகள் முயற்சியைத் தடுத்து, ஆதிக்கவாதிகளுக்கு இன் துணையா கிறது!' என்று காந்தியத்தைப் பழிப்பவர் கூட உண்டு. அவர்களே இன்றைய உலகில் முற்போக்குவாதிகள் என்று குறிக்கப்படுவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
காந்தியடிகள், டால்ஸ்டாய் வள்ளுவர்
பண்பில்
நின்றவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், காந்தியடிகளையும்,
டால்ஸ்டாயையும் கண்டிப்பவர்கள்
திருக்குறளில் மேற்கோள் காட்ட முடியும்.
கருத்துகளுக்கும்
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளிலார்க்கு
அவ்வுலகம் இல்லாகி யாங்கு'
ய
இக்குறட்பா முந்திய கண்டனத்தை நினைவூட்டுகிறது.
'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’
இஃது உயிர் அவாவின் அருமை குறிக்கிறது. அதே சமயம் காந்தியடிகள், டால்ஸ்டாய் போன்ற அருளாளர் பணிகளைக் கண்டிக்கும் இக்கால முற்போக்காளர் உட்கருத்துக்கு இது வலிமை தருவது என்பதில் ஐயமில்லை. இப் புதிருக்கு விளக்கம் யாது?
இவ் வருளாளர்கள் பின்பற்றிய பண்புகள் திருவள்ளுவர் விளக்கிய பண்புகளே-அதற்கு அவர்கள் தந்த விளக்கங்கள் மட்டுமன்றி நாம் தரும் விளக்கங்களும் கூடத் திருவள்ளுவர் பண்பு விளக்கத்தின் சறுக்கல்கள் ஆகும். ஏனெனில், திருவள்ளுவர் பாராட்டியது முற்றிலும் எளிய வாழ்க்கையை யோ, போதுமென்ற மனத்தையோ அன்று. தனக்குப்போதும் என்ற தன்னெளிமை வாழ்க்கையையே! அவாவையும், பேரவாவையும், உயர் அவாவையும் அவர் பொதுநலத் துறையிலேயே, அதற்குகந்த பண்புகளிலேயே, திறங்களிலேயே செலுத்தும்படி அறிவுறுத்தினார்.