196 ||
அப்பாத்துரையம் - 15
களாகிய அரசியல் ஆகூழையும் பயன்படுத்தி ஊழ் கடந்து வளரலாகும். இவற்றை எதிர்த்த வழி, இவையே முயற்சியின் போகூழ், இழவூழ் ஆகிவிடும்.
வள்ளுவர் அவாவறுத்தலின் பின் ஊழ் அதிகாரம் அமைத்ததும், அவ்வதிகாரங்கள் அறம், பொருள் ஆகிய இரண்டு பால்களின் சந்திப்பில் இடம் பெற்றதும் இதனாலேயே யாகும்.
வள்ளுவர் வகுத்த மனநிறைவு இங்ஙனம் தன்னல மறுத்த மனநிறைவு ஆகும். அது தனி மனிதனுக்கு இன்பமும் அமைதியும் தருவது. நடு நிலையளிப்பதால் அஃது அறிவு வளர்ப்பது. பொதுநல அவா வளர்ப்பதால் உயிர் நலம் உடையது. தனி மனிதனுக்கும் இனத்துக்கும் அது புகழும் வலுவும் தருவது ஆகும்.
வள்ளுவர் வகுத்த மனநிறைவுப் பண்பைத் தமிழர் இழந்து ஊழூழிக் காலம் ஆய்விட்டது. ஆனால் தமிழன் படிப்படியாகத் தட்டுக்கெட்டு வந்துள்ள ஊழிகளே இவை. தன்னலப் போட்டியும் பொறாமையும், ஆதிக்கப் பேரவாவும், இவற்றுக்கு நேர்மாறான அடிமைத் தனமும் தன்மதிப்பின்மையும் ன்றுவரை தமிழினத்தினிடம் செறிந்துள்ளன-பிற னங்களைப் பார்க்கிலும் மிகுதியாகத் தோய்ந்துள்ளன என்பதில் ஐயமில்லை. விழிப்புற்றுவரும் தமிழகம் எல்லா வகைப்பட்ட நேரிடை ஆதிக்கவாதிகளின் ஆதிக்கத்திலிருந்தும்; மறைமுக ஆதிக்க வாதிகளின் பசப்பிலிருந்தும், மாயங்களி லிருந்தும்; இவற்றுக்கு உறுதுணை யாயிருந்து இவற்றை வளர்க்கும் அடிமைத் தனத்திலிருந்தும், குறுகிய தன்னலத்தி லிருந்தும் விடுபடுதல் வேண்டும். விடுபட்டு, பொதுநலப் பேரறிஞரான திருவள்ளுவரின் வள்ளுவப் பொற்சுரங்கம் கண்டெடுத்து அறிவுழைப்பால், ஆராய்ச்சியால் அதன் அறிவு மரபு துலக்கி, இன்பத்துள் இன்பத்தைத் தானும் உண்டு உலகுக்கும் வழங்குமாக.