210
அப்பாத்துரையம் - 15
த
என்பதிலும் இதே அருளார்ந்த வசையின் நகைச்சுவை ததும்புகிறது. உணர்வுச் சுவையுடன் கேளாதவர் அவர்கள், கேட்டாலும் கேளாதவரே என்ற குறிப்புத் தொனிக்கிறது. புறச்செவிடில்லாவிட்டாலும்
ஏளனவசையும் ஒலிக்கிறது.
அகச்செவிடே என்னும்
'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்!'
வள்ளுவர் கால உயர்தமிழ்ச் சொற்களுள் ஒன்று ‘ஆற்ற’ என்பது. வள்ளுவப் பெருமான் கவிதையின் ஆர்வ ஆத்திரத்தை அது குறிக்கிறது. அமிழ்தின் தன்மை உணவின் புறச்சுவையி லில்லை. அதன் உயிர்ச் சுவையிலேயே இருக்கிறது என்றும் 'சிறுகை,' 'அளாவிய', 'கூழ்' என்ற சொற்கள் வலியுறுத்து கின்றன.
‘மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு'
"
ஐம்புல நுகர்வைப் பெண்மையில் கண்ட இதே புரட்சிக் கவிஞரே, குழந்தையின்பத்தையும் அதே வடிவாகக் கண்டார். இனவாழ்வின் மறுமலர்ச்சியே பெண்ணுரு, அதன் புது மலர்ச்சியே குழந்தை என்பதைக் காண உணர்ச்சிக் கவிஞர் புனைவாற்றல் மட்டும் போதாது அறிவு, அறம், அன்பு, அருள் கடந்த மெய்யுணர்வுக் கவிதை தேவைப்படுகிறது என்பதை இங்கே
காணலாம்.
-
இதே இனிய தொடர்கள், கருத்துகளைச் சங்கப் புலவர் பலரிடம் காணலாம்-தொல்காப்பியரிடம் காணலாம். ஆனால், அவர்கள் அனைவரும் தமிழர்-தனித்தமிழ்க் காலத்தினர். அது மட்டுமன்று. அவர்கள் வள்ளுவர் வழிநின்று கூறியவர்களே. இதை வருங்காலத் தமிழகமும் வருங்கால உலகமும்தான் கண்டுதெளிதல் வேண்டும். ஆனால், அவர்கள் சென்றெட்டாத அடுத்த உயர் படியையும் வள்ளுவர் கண்டார் என்பதை நாம் சுட்டிக் காட்ட முடியும். ஏனெனில், அஃது அக்காலத் தமிழர் மட்டுமல்லர், இன்றுவரை தமிழரும் சரி, பிற இனத்தவரும் சரி, எவரும் என்றும் காணாத, கருதாத தளம் ஆகும்.