உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துள் இன்பம்

235

அடுத்த புதுமலர்ச்சி ஊழி -மனித ஊழி அல்லது தெய்வ ஊழியின் தொடக்கம் ஆகின்றது.

குடும்பம் உயிரினத்தின், மனித இனத்தின் இன வாழ்வுத் தொடக்கம்; உயிரின் புதிய இன மலர்ச்சியின் முதற்படி. அதன் முதல் முக்கியத்துவம் இது. ஆனால், அது முதற்படி மட்டுமன்று; ஆலமரத்தின் பாரிய அளவையும் பல நூற்றாண்டுகளடங்கிய வளர்ச்சியையும் கருநிலையில் தன்னகத்தே முழுதுறக்கொண்ட ஆலம் விதை போல, குடும்பம் இனவாழ்வின் முழுப்பரப்பையும் முழு வளர்ச்சிப் பண்பையும் தன்னகம் கருநிலையில் கொண்டு, இனத்தின் முழுநிறை விதையாக இலங்குகின்றது.

மனித இனத்தில் அறிஞர் இப்பண்பைக் குடும்பத்தில் இன்னும் கண்டறிய வில்லை. ஆனால், இன உணர்வு உள்நின்று தூண்ட மனித இனக்கவிஞர், கலைஞர் இதனை இயல்பாக உணர்ந்துள்ளனர். உலகின் எல்லா மொழிகளிலும் இலக்கியத்தின் பெரும்பகுதி குடும்பம் பற்றியதாகவே அமைந்துள்ளதன் காரணம் இதுவே.

அகம் குடும்பம், புறம் சமுதாயம் - இவ்வகுப்பு முறை மனித இனத்திலே இனஉணர்வில் முந்தி நின்ற தமிழினத்துக்கு மட்டுமே யுரிய பாகுபாடு ஆகும். இதன் நிழலைக் கீழ்த்திசைச் சமய அறிவு நூல்களிலும் சமற்கிருதத்திலும் அறிவான் (ஞாதுரு), அறி பொருள் (ஞேயம்) என்ற பாகுபாட்டில் காணலாம். தற்கால மேலை ஆய்வியல்களில் இதனை அகநோக்கு(subjectivity), புறநோக்கு(objectivity) என்ற வகுப்பு முறையில் காண்கிறோம். ஆயினும் அகப் பண்பின் நுண்ணாய்வில் இன்னும் உலகின் எவ்வினமும் பண்டைத் தமிழினத்துக்கு ஈடன்று. ஆனால் ன்றைய தமிழினமே அச்சிறப்பை முற்றும் உணரத் தலைப்படவில்லை.

-

விலங்கினம் கடந்து மனித இனம், மனித இனம் கடந்து தமிழினம், தமிழினம் கடந்து தெய்வப்பண்பு கண்ட திருவள்ளுவர் இது வள்ளுவரை இனி உலகம் காணுதல் வேண்டும் படிமுறை. அவர் ஒருவரே இன வாழ்வின் வேராகக் குடும்பத்தையும், அதன் முகடாகக் கடவுளையும், இவற்றின் ஊடாக இனவாழ்வையும், அதன் கூறுகளான அறம் பொருள் இன்பங்களையும் கண்டவர் ஆவார். அவ்வழி நின்று நாம் அதனைக் காண முயலுதல்வேண்டும்.