இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இன்பத்துள் இன்பம்
243
இடைக்காலச் சமயவாணரும், புராணமுடையாரும் அதை மேலே உள்ள உலகம் என்று கொண்டு அதற்கு மாறாகக் கீழேயுள்ள உலகும், நடுவே உள்ள உலகும் கருத்தில் உருவாக்கிக் கொண்டனர்.
வள்ளுவர் குறிக்கொண்ட இனத்தின் இன்பம் நிறைவுடையது-அது தனிமனிதன் இன்பம் மட்டுமன்று, இன இன்பம் மட்டுமன்று-இரண்டும் ஒன்றான நிறை இன்பம். ஒழுக்கம், சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, குடும்பம் எல்லாம் அதனை நோக்கிய பண்புகளே. வாழ்வு என்ற பண்பார்ந்த சொல்லின் முழுப்பொருள் இதுவே. வள்ளுவர் பெருமான் காட்டிய திசையில் இறைவழி நின்று, மன்னன் துணையுடன், பண்பாளர், அந்தணர் இயக்க இயங்கும் முப்பாலாழி இயக்கி இன்பத்துள் இன்பம், நீடின்பம், நிறை இன்பம் பெறுவோமாக! பெற்று உலகுக்கு அளிப்போமாக!