உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

"செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச் சிமய மால் வரைதிரித்தருளி, மீள அதனைப்

பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில்

83

பாய்புலிக் கொடி குறித்ததும் மறித்த பொழுதே” (கலிங்கத்துப்பரணி)

இதே செய்தியுடன் காவிரிக்கரை கட்டிய செய்தியும் பிறவும் சேர்த்து.

தென்னருவிச்

சென்னிப்புலியேறு இருத்திக் கிரி திரித்துப்

பொன்னிக்கரை கண்டபூபதி

(விக்கிரம சோழனுலா)

என்று மூவருலா முதலிய பிற்கால ஏடுகளும் கல்வெட்டுக்களும் கரிகாலன் புகழை எல்லையறப் பெருக்கிக் கூறுகின்றன.

பதினான்காம் நூற்றாண்டில் (கி.பி. 1356) வச்சிரநாடு அதாவது நாகபுரி யடுத்துள்ள பஸ்தர் நாட்டில் ஆண்ட தெலுங்குச் சோட அரசன் பக்திராயன் செப்புப்பட்டயம் கரிகாலன் புகழை வேறு எந்த நூலும் ஆதாரமும் கொண்டு செல்லாத அளவு உச்சி வான் ஏற்றுகிறது. அவன் வடநாட்டில் வென்ற மன்னர் தலைமீதே கங்கை நீர் ஏற்றிக் கொண்டுவந்து தமிழகத்தில் குளித்தான் என்றும், போசராசனை வென்றான் என்றும் முக்கட் பல்லவன் கண்ணொன்றைக் காற் பெருவிரலால் அழுத்திக் குறைத்தான் என்றும் அது கூறுகிறது.

பண்டைப் பெருஞ் சோழர் போர்கள்

பின்னாளைய பருஞ்சோழர்களைப் போலவே சங்ககாலத்தில் ஒன்றிரண்டு நூற்றாண்டுகளேனும் சோழர் தமிழக முதற் பேரரசராக இருந்து தமிழகம் கடந்து அண்மை வடதிசையிலும் தொலை வடதிசையிலும் தம் வீரப் புகழ்பரப்ப முயன்றனர் என்பதற்கு ஐயமில்லை. அப்பண்டைப் பெருஞ்சோழர் காலத்துப் போர்களில் செருப்பாழியும் கரிகாலன் வடதிசை வெற்றிகளும் உயர் வான் முகடுகளாகும் என்பதிலும் ஐயமில்லை. இவற்றுக்கு இடையிலோ முன்னோ பின்னோ என்று வரையறுக்க முடியாத பல சோழப் பெரும் போர்களை நாம் சங்க இலக்கியப் பலகணி மூலமாகக் காணலாம்.