உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 16

ஆண்ட தலைநகரம் ‘கடம்பின் வாயில்' என்ற பெயருடையதாய் இருந்தது. நன்னன் உண்மையில் கடம்ப மரபினன் என்பதையும் அவன் ஆண்ட பகுதியாகிய பாலி நாடு, கடம்பர் தாயகமான கொண்கானத்தின் ஒரு பகுதியே என்பதையும் இது காட்டுகிறது.

கடம்பர்கள் மூலத்தாயகம் கொண்கானக்கரை என்பதை

மட்டுமே அவர்கள் பிற்கால வரலாறு காட்டுகிறது. ஆனால், சேரர்களின் எதிரிகளாகிய கடம்பர்கள் கடற் கொள்ளைக்காரர் களாக இருந்தனர். அவர்கள் கொள்ளைத் தொழிலுக்குரிய மூலதனம் கடற்கரையில் இல்லை. கடலகத்தே ஒரு தீவிலே இருந்தது. அவர்கள் மரபுச்சின்னமாகிய தாய்க் கடம்ப மரம் இருந்த இடமும் அதுவே. இத்தீவைக் கிரேக்கர் 'லெயூகெ' அதாவது வெள்ளைத்தீவு என்று அழைத்தனர். அதுவே மங்களூரை அடுத்துள்ள 'தூவக்கல்' என்ற தீவு என்று ற வரலாற்றாராய்ச்சியாளர் கருதுகின்றனர். லெயூகெ என்ற கிரேக்கச் சொல்லும், தூவக்கல் என்ற பழந்தமிழ்த் தொடரும் இரண்டுமே வெள்ளைத் தீவு என்றே பொருள்படுவன.

மேல் கடற்கரையில் 'பாருகச்சம்' என்ற பண்டைத் துறைமுகம் தற்காலப் பம்பாய் அருகில் இருந்தது. அதிலிருந்து மலபார்க் கரையிலுள்ள முசிறி வரையிலும் இக்கடற் கொள்ளைக்காரர் நடமாட்டம் மிகுதி என்றும், மேனாட்டுக் கப்பல்கள் இதற்குத் தெற்கேதான் வாணிகம் நடத்த முடியும் என்றும் கிரேக்கர்கள் குறித்துள்ளனர். சேர அரசர் ஆட்சியும், பாண்டிய மன்னர் ஆட்சியும் இதற்குத் தெற்கே பாதுகாப்பளித்த செய்தியையும், சிறப்பாகச் சேரர் இவ்வாணிக எல்லையை மங்களூர் கடந்து கி.பி. முதல் நூற்றாண்டுக்குள் பரப்பினர் என்ற செய்தியையும் கிரேக்க நூலார் குறிப்புகளே தெளிவு படுத்துகின்றன.

கடம்பெறிந்த சேரர் பெருமை

கடம்பர் எவ்வளவு பழமையானவர். அவர்களுக்கும் சேரர் களுக்கும் இடையேயுள்ள தொடர்பு எவ்வளவு நீடித்த ஒன்று என்று நம்மால் கூறமுடியாது. கந்தபுராணத்தின் முருகன் சூரபன்மன் போராட்டத்தில் அடங்கியுள்ள மருமம் அது. ஆனால், பதிற்றுப்பத்துத் தரும் ஒளியால், நமக்கு அதன் மூலம்

-