உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 16

வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்”

(சிலப் XX vii 134 -6, 141-2)

இதில் கடல் கடம்பெறிந்த செய்தியே முதலாவதாகக் கூறப் பட்டுள்ளது. இமய மலையில் விற்கொடி பொறித்தது; யவனர் நாடு ஒன்றை வென்று திறை கொண்டு ஆண்டது; கடம்பர் நாட்டகத்திலேயுள்ள பொன் விளையும் குடகுமலை புகுந்தது ஆகிய இமய வரம்பனின் மற்றச் செயல்களும் குறிக்கப் பட்டுள்ளன. மற்றும் சிலப்பதிகாரத்திலேயே,

66

'முந்நீரின் உட்புக்கு மூவாக் கடம்பு எறிந்தான்

மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்

கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால்"

(சிலப் Xvii உள்வரி வாழ்த்து 3)

எனக் கடம்பெறிந்த செயல் இனிய முறையிலே புனைந்து பாராட்டப்படுகிறது.

பதிற்றுப்பத்திலும் மேற்குறிப்பிட்ட செய்திகளுடனே ஏழு முடிமாலையணிதல், இமய முதல் குமரிவரை ஆட்சி பரப்புதல் முதலியன கூறப்படுகின்றன. அவற்றிடையே,

“பலர் மொசிந்து ஓம்பிய திரள்பூம் கடம்பின்

கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்”

66

கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!”

(பதிற் xi 12-13)

(பதிற் zii 3)

என்று கடம்பரின் மூலதனத்தில் அவர்கள் சின்னமான கடம்ப மரம் வெட்டப்பட்ட செய்தி குறிக்கப்படுகிறது. மற்றும்,

"துளங்கு பிசிருடைய மாக்கடல் நீக்கிக்

கடம்பு அறுத்து இயற்றிய வலப்படு வியன் பனை. (பதிற் xvii 4-5)

என்றதன் மூலம் கடம்பைச் சென்றடைவதற்காகக் கடலில் நாவாய் செலுத்திச் சென்ற செய்தியும்,

“எங்கோ

இரு முந்நீர்த் துருத்தியுள்