உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

கொங்கர் செங்களம்

உறுதியாய் விடவில்லை.

99

நெடுமிடலை அடக்கிய சேரன் செங்குட்டுவன் முன்னோன் இருதிசைக் கடலிலும் நீராடித் தமிழகத்தின் வடதிசை முழுவதும் ஆட்கொண்டிருந்தான். ஆயினும் கொங்கு வெற்றி முழுதும் கொங்கு நாட்டில் எழுந்த கிளர்ச்சிகளைச் செங்குட்டுவன் செங்களம் என்ற இடத்தில் போர் செய்து அடக்க வேண்டிவந்தது. இதில் சோழர் பாண்டியர் கொங்கருக்கு உதவினர் என்று தோற்றுகிறது.

“நும்போல் வேந்தர் நும்மோடு இகலிக்

கொங்கர் செங்களத்துச் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தனராயினும், ஆங்கவை

திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன”

(சிலப்பதிகாரம் XXV 152 - 155)

என்று சிலப்பதிகாரத்தில் வில்லவன் கூற்றாக இதை இளங்கோ அறிவிக்கிறார்.

இடும்பில்; வியலூர்; கொடுகூர் வெற்றிகள்

செங்குட்டுவன் உள்நாட்டுப் பெரு வெற்றிகளில் கொங்கு நாட்டுப் போருக்கு அடுத்தபடி இடும்பில் கைக் கொண்டதும், வியலூர் கொடுகூர் அழித்ததும் முக்கியமானவை ஆகும்.

இடும்பில் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள இடும்பாவனம் என்றும் உரையாசிரியர் அடியார்க்குநல்லார் குறிக்கிறார்.

"மாறா வல்வில் இடும்பில் புறத்திறுத்து’

என்று பதிற்றுப்பத்தும்,

கொடுந்தேர்த்தானையோடு இடும்பில் புறத்திறுத்து

(பதிற் 5 பதிகம் 9)

(சிலப் XXViii 118)

என்று சிலப்பதிகாரமும் இதனைக் குறிப்பிடுகின்றன.

வியலூர் தஞ்சையில் உள்ள திருவிசலூர் என்று சிலர்

கூறுவர். ஆனால்,,