தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
103
இருந்தனர். அவர்கள் பலமொழி பேசுபவர்கள், ஆரியமும் தமிழு மாக அவர்கள் மொழிகள் மயங்கிக் குழம்பின. போரின் மறக்கத் தகாத கண்கொள்ளாக் காட்சி செங்குட்டுவன் ஆற்றிய யானைப் படையின் தாக்குதலே என்று இளங்கோ கூறுகிறார்.
கொங்கணர், கவிங்கர், கொடுங்கரு நாடர் பங்களர், கங்கர், பல்வேற் கட்டியர்
வட ஆரிய ரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது.
(சிலப் XXV 156)
கங்கைப்போர் II அல்லது குயிலாலுவப் போர்
சேரன் செங்குட்டுவனின் இரண்டாவது வடதிசைப் படை யெழுச்சி சிலப்பதிகாரத்திலேயே மிகவும் விரிவுபட உரைக் கப்பட்டுள்ளது. அப்படையெடுப்புக்கான இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று; கண்ணகிக்குச் சிலை கொ காணர்வது. மற்றது; வடதிசையரசர்களில் பால குமாரன் மக்களாகிய கனகனும் விசயனும் தமிழரசரை ஏளனமாகப் பேசியது. பின்னதன் பயனாக, சேரன் செங்குட்டுவன் ஒருநெடு மொழி கூறிப் புறப்பட்டான். “இந்த வடபுல ஆரிய அரசரை முறியடித்து அவர்கள் தலைமீதே கண்ணகி சிலையை ஏற்றிக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாவிட்டால், நான் செங்கோலரசனல்ல!" என்று அவன் சீற்றத்துடன் எழுந்தான்.
முதற் கங்கைப் போர்க் காலத்திலிந்தே வடதிசையில் மகதப் பேரரசராக இருந்து நூற்றுவர் கன்னர் சேரன் செங்குட்டுவனுக்கு உற்ற நண்பராய், அவன் மேலாட்சியை ஏற்றிருந்தனர். சேரன் வடதிசைப்படையெடுப்புப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவர்கள் அவனை எதிர் கொண்டு வரவேற்கச் சஞ்சயன் என்ற படைத் தலைவனுடன் நூறு ஆடல் நங்கையர், இருநூற்றெட்டுப் பாடகர், நூறு கழைக்கூத்தாடிகள், நூறுதேர், பதினாயிரம் குதிரைகள், இருபதினாயிரம் வண்டிகள், அணிமணிப் பரிசுகள் அனுப்பியிருந்தனர். சேரன் அவர்களை ஏற்று, கங்கை கடக்க நாவாய்ப் படைகளைச் சித்தம் செய்து வைக்குமாறு அவர்களுக்கு ஆணை போக்கினான்.