உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

இன்பல் அருவிக் கங்கை மண்ணி

அப்பாத்துரையம் - 16

இனந்தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு" (பதிற்: -5, பதிகம் 4-8) என இவ்வெற்றியின் பயனாக வடக்கிலிருந்து பல ஆனிரை களையும் கைக்கொண்டு வந்ததாக இப்பதிகம் குறிக்கிறது.

பதிற்றுப்பத்து மூலத்திலோ வேறு சங்கப்பாடல்களிலோ செங்குட்டுவனின் கங்கைப்போர், குயிலாலுவப் போர் ஆகியவை தெளிவாக குறிக்கப்படாவிட்டாலும், அவற்றைப் பொதுவே சுட்டுபவையாகக் கொள்ளக்கூடிய பகுதிகள் பதிற்றுப்பத்திலும் அகநானூற்றிலும் உண்டு.

“கடவுள் நிலைஇய கல்ஓங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமயமாகத்

தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச்

சொல்பல நாட்டைத் தொல்கவின ழித்த

-

போர் அடுதானைப் பொலந்தார்க் குட்டுவ!" (பதிற்; - XLiii 6 – 11)

"ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்

தொன்றுமுதிர் வடவரை வணங்கு விற்பொறித்து

வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்

வஞ்சி”

(அகம் -396)

இவற்றுள் பிந்திய பாடல் பத்துப்பாட்டில் செங்குட்டு வனைப் பாடிய அதே புலவர் பாட்டே.ஆயினும் மன்னர் பெயர் இல்லாததால் அது செங்குட்டுவன் செயலை மட்டுமன்றி, அவன் தந்தை அல்லது முன்னோனான மயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செயலையும் பொதுவாகச் சுட்டத்தக்கதாய்

உள்ளது.

“உடன்று மேல்வந்த ஆரிய மன்னரைக்

கடும்புனற் கங்கைப் பேராற்று வென்றாய்!"(சிலப். XXViii 120 – 121)

என்று சிலப்பதிகாரத்தில் மாடலன் கூற்றாக வரும் அடிகளும் இரண்டு கங்கைப் போர்களுக்கும் பின் பேசப்பட்டது என்ற முறையில் இரு போர்களையும் பொதுவே சுட்டுபவையாகவே உள்ளன.