உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108 ||-

அப்பாத்துரையம் - 16

குறிக்கப் படும் அரசன் அவனுக்குப் பேராதரவாயிருந்து அவன் பேரரசாட்சியைப் பரப்புவதற்கு உதவியாயிருந்த வலிமை வாய்ந்த காசுமீர நாட்டரசன் விசயாலயனே என்றும், இருவரையும் சேரன் வென் றடக்கிய இரண்டாங் கங்கைப் போர் அவன் பேரரசின் கிழக்கெல்லையும் ஆந்திரப் பேரரசர் மேற்கெல்லையுமாகிய வடமதுரை அல்லது தில்லிநகரப் பகுதிக்கருகிலேயே நடை பெற்றிருக்க வேண்டுமென்றும் கருத இடமுண்டு. பின்னாளைய சோழப் பெரும் பேரரசன் முதலாம். இராசேந்திரன் வெற்றிகளும் மதுரை மண்டலம் அல்லது வடமதுரைவரைக்கும் பரவிச் சென்றன என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.

கனிஷ்கனுக்குப் பிற்பட்ட அரசர் தமிழகச் சைவ-வைணவ நெறிகளை ஏற்றுச் சைவ - வைணவப் பெயர்களை மேற் கொண்டிருந் தனர் என்பதும், அவர்கள் பேரரசிழந்து மிகச் சிறு சிற்றரசராகவே இயங்கினர் என்பதும் இவ்விளக்கத்துக்கு வலுத்தருவது ஆகும். ஆயினும் இராசேந்திரன் வெற்றிகளையே மறைத்தும் இருட்டடித்தும் வந்த வடதிசை பாசமும் தென்திசை கலக்கணியும் மிக்க மாநில வரலாற்றாசிரியர்கள் இப்பண்டைச் செய்திகளை ஆராய்ந்து மெய்ம்மை காண விழையாது ஒதுக்குவதில் வியப்பில்லை.

கனகவிசயர் ஒரே அரசன் பாலகுமாரன் மக்களாகச் சிலம்பில் குறிக்கப்பட்டுள்ளனர். இது மேற்கூறிய விளக்கத்துடன் முரண்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், கால நிலைமைகள் வடதிசையாளர் உவர்ப்புநீக்கி, அதே சமயம் வேறு உவப்புக் கலவாத நிலையில் ஆராய்தற்குரியதேயாகும். அதுவரையில் ஓரளவு மேற்கூறிய விளக்கமே வரலாற்று நிலைக்கு மிகவும் நல் விளக்கமாகக் கொள்ளப்படல் தவறன்று.