உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110 ||.

அப்பாத்துரையம் - 16

தில்லை. சங்க இலக்கியத்துக் குள்ளேயே அது வகையில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

இதுவரையில் சங்க இலக்கியத்தை ஆராய்ந்தவர்கள் பெரும்பாலும் -வரலாற்றாராய்ச்சியாளர் மட்டுமன்றிப் புலவர்களும் கூட -சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் சங்க இலக்கிய காலத்துக்குப் பிற்பட்ட ஏடுகளாகவோ, அல்லது சங்க இலக்கிய காலத்திலேயே பிற்பட்ட ஏடுகளாகவோதான் கருதி வந்துள்ளனர். இலக்கியம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் சில மயக்க முடிபுகளை இம்மயக்க முடிவுக்கு ஆதாரமாகக் காட்டியும் அமைத்துள்ளனர். ஆயினும் அவர்களே, அவர்களில் பெரும்பாலானவர்களே, செங்குட்டுவன் காலத்து (ஆரியப் படை கடந்த) நெடுஞ்செழியனுக்குத் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன் பெயரனென்றும், பாண்டியன் கானப்போர்தந்த உக்கிரப் பெருவழுதி பாண்டியர்களுள் கடைசியானவன் என்றும் முடிவு கண்டுள்ளார்கள். சரியானால் அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் காண்டதுபோல மணிமேகலை சிலப்பதிகார ஏடுகளும் செய்திகளும் சங்க காலத்தின் இறுதிப்பகுதிக்கல்ல, நடுப்பகுதிக்கே உரியவை என்பது தெளிவு.

து

விரிவான சங்க இலக்கிய கால வரிசை ஆராய்ச்சிகள் மூலம் புது முடிபுகள் காணப்படும்வரை பதிற்றுப்பத்தின் முதல் நான்கு பத்துக்களும், மாமூலனார், பரணர், கள்ளில் ஆத்திரையனார் முதலிய முற்காலப் புலவர்களும் குறிப்பிடும் செய்திகள் கடைச் சங்கத்தின் முற்காலத்துக்குரியவை என்றும், ஐந்தாம் பத்தும் அதனோடு சமயகாலத் தொடர்புடையவராகத் தெரியவரும் சங்ககாலப் புலவர்கள் குறிப்புக்கள் நடுக்காலத்தன என்றும், பிற சங்கப் புலவர்கள் குறிப்பிடும் செய்திகள் பிற்காலத்தன என்றும் கொள்வதே பொருத்தமானது.

இருவகைப் போட்டிகள்

தமிழக வரலாற்றில் ஒளிகாண விரும்புபவர்கள் பண்டைத் தமிழர் அரசியல் வாழ்வின் இரண்டு போக்குகளைக் கவனித்தல் வேண்டும். ஒன்று வேளிர் அல்லது குடியரசர் வலிமைபெற்று வல்லாட்சி எய்தி, முடியரசரை எதிர்த்தும் பிற குடியரசரை