உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

127

அருஞ்செயலாகச் சிறப்பித்துப் பாராட்டியுள்ளார். 'குழியகப் பட்டகொல் களிறு தன் கொம்புகளின் ஆற்றலால் குழிதூர்த்துத் தன் கிளையினத்துடன் சென்று சேர்தலை' அவன் முயற்சிக் கேற்ற உவமையாக அவர் எடுத்துக் கூறுகிறார்.

வீறுமிக்க பேரரசனைப் பாடிய விழுமிய

சிறுபெருங்காப்பியம்

பாண்டியனைச்

சிறப்பித்துக் கூறும்

சிறு

பெருங்காப்பியங்கள் இரண்டினுள், மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சியுடன் போட்டியிடுவதன்றி, அதனை விஞ்சிய, வீறுடைய சிறு பெருங்காப்பியமாகத் திகழ்வது, நக்கீரனார் பாடிய நெடுநல் வாடையே. சங்க இலக்கியமென்னும் ஒப்புயர்வற்ற கலை மாளிகையிலேகூட இதற்கிணையான காப்பிய இலக்கணம் நிறைந்த ஒரு சிறு பெருங்காப்பியம் காணமுடியாது. அதில் நாம் ஒருபுறம் நெடுஞ்செழியன் வெற்றிப் போர்க்களத்திலிருந்து வரும் வரவுக்காகக் காத்திருக்கும் பேரரசியாரின் சோகக்காட்சியை - நள்ளிரவிலே அவள் படுக்கையறையிலேயே சென்று

காண்கிறோம். மறுபுறம் போர் வெற்றியின் புகழ் வீறுடைய நெடுஞ்செழியனினும் பெரியோனான மனிதப் பண்புமிக்க பேரரசன் நெடுஞ்செழியனைக் காண்கிறோம்.

சங்க இலக்கியத்திலேகூட ஓர் அரசன் உள்ளத்தை அரசியின் உள்ளத்தின் பின்னணியுடன் காணும் இது போன்ற காட்சிபிறிதில்லை என்னலாம். மன்னன் இப்போது வெற்றி மகிழ்ச்சியில் இல்லை; தன்னை வரவேற்கக் காத்திருக்கும் தன் ஆருயிர்த் தலைவியான பேரரசியிடம்கூட இல்லை; போரில் புண்பட்ட வீரரிடமே ஈடுபட்டு நிற்கிறது. நள்ளிரவு என்றும் பாராமல், இருட்டையும், குளிர் காற்றையும், மழைத் தூறலையும் பொருட்படுத்தாமல் படை வீட்டிலிருந்து புறப்பட்டு மன்னன் படைக் களத்திலே சுற்றுகிறான்.யானையின் அறுந்த துதிக்கைகள்; வீரரின் குறைபட்ட யாக்கைகள் எங்கும் கிடக்கின்றன.பாண்டில் விளக்கேந்தி ஒருவன் அருகே வருகிறான்; விழுப்புண் பெற்ற வீரர், புகழ் பெற்றோர் ஆகியவரை மன்னனுக்குக் காட்டி அறிமுகப் படுத்தும்படி படைப்பெருந்தலைவன் (முன்னோன்) வேலுடன் செல்கிறான்; வெண் கொற்றக் குடையை முதியவன்