140
||--
அப்பாத்துரையம் - 16
களப்பிரர் ஆட்சி கலியாட்சி என்றும் அயலாட்சி என்றும் பிற்கால நூல்கள் மிகைப்படுத்தியது சமய வேறுபாடு காரணமாக மட்டுமே. களப்பிரர் படையெடுப்பு மக்களிடையே ஒரு சமுதாய மாற்றமாகவும் பண்பாட்டு மாற்றமாகவும் சில இடங்களில் ஆட்சி மாற்றமாகவும் இருந்ததேயன்றி, ஒரே அழிவாக இருந்ததில்லை. சங்க காலத்துக்குச் சிறிது பிற்பட்ட பாண்டி நாட்டிலேயே மாணிக்கவாசகர் வாழ்ந்து இறவாப் பாடல்கள் பாடியுள்ளார். கல்லாடர், திருமூலர் வாழ்ந்ததும், சேந்தன் திவாகரம் முதலிய புதுநூல்கள் எழுந்ததும், சீவகசிந்தாமணி முதலிய புதிய சமண காவியங்கள் எழுந்ததும், இக்காலத்திலேயேதான். சைவ நாயன்மார், வணவ ஆழ்வார்களில் முற்பட்ட சிலர் இக்காலத்தவரே. நமக்கு முழு விவரம் தெரியாவிட்டாலும் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை வலி குன்றியவராகவோ வலியுடையவராகவோ பாண்டிய சோழர் இக்காலங்களிலும் ஓரளவு ஆட்சி செய்யாமலில்லை. பொதுவாக தமிழக முதன்மைப் போட்டியின் நலிவுக்குமே
காரணமாயிருந்திருக்க வேண்டும்.
வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ப் பட்டயம் ஆகிய வற்றின் வாசகங்களை நோக்க, பாண்டி நாட்டில் பாண்டியன் கடுங்கோன் ஆட்சியிலேயே களப்பிரர் அரசு கைக் கொண்டனர் என்றும், அவனாலேயே அது மீண்டும் கைப்பற்றப் பட்ட தென்றும் எண்ண இடமுண்டு. அத்துடன்,
“துன்னு சேனையில் துளங்கிய ஒருகரு நாட
மன்னன் அன்ன நான் வதிந்தருள் தென்னனை ஓட்டிக் கன்னிமண்டலம் கொண்டு அமண் கையர் கை விழுந்து முள்னம் நீடிய வைதிக நெறியையும் ஒழித்தான்"
என்று திருவிளையாடற் புராணப் பாடல் கூறுவதும் இதனை வலியுறுத்துகின்றது.