உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

அப்பாத்துரையம் - 16

பெரிதும் ஆதரித்ததனால் வடதிசையினரே என்று வேறு சிலரும் கருதியுள்ளனர்; அவர்கள் சோழ மரபினர் என்று எண்ணுபவரும் உண்டு.

பல்லவர் என்பது நாடு குறித்த, அல்லது இனம் குறித்த பெயர் அன்று. அது குடிப்பெயரே என்பது தெளிவு. திரையர் இனத்தவரே பெரிதும் வாழ்ந்த தொண்டை நாட்டை அவர்கள் நீடித்து ஆண்டனர். அவர்கள் சோழ மரபுடனோ ஆந்திர மரபுடனோ களப்பிரருடனோ தொடர்புடையவராயிருக்கக் கூடும். ஆனால், மூவகையிலும் அவர்கள் தமிழர் அல்லது தமிழினத்தவர் என்பது தெளிவு. அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தவர் என்று கூறிக்கொண்டதுண்டு. ஆனால், திரையர் அல்லது பரதவர் குலமரபுக்கொத்ததே. அவர்கள் கொடிகளும் சின்னமும் கிட்டத்தட்டச் சோழருக்குரியதே. அவர்கள் பாளி-சம்ஸ்கிருத ஆதரவு உண்மையில் அவர்கள் புத்த சமண நெறியையே காட்டுகிறது. களப்பிரரும் தமிழகத்தில் பாண்டியர்களும் பல்லவர்களும் ஏழாம் நூற்றாண்டு வரை சமணரே என்பதும், ஆந்திரப் பேரரசர்கள் பலர் புத்த நெறியினர் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கன.

து

களப்பிரர் குடியெழுச்சி கி.பி.3-முதல் 5-ஆம் நூற்றாண்டு வரை பரவியிருத்தல் வேண்டும். பல்லவர் ஆட்சி காஞ்சியில் அமைந்ததும் இக்காலத்தின் தொடக்கத்திலேயே. ஆனால், மூன்றாம் நூற்றாண்டிலிருந்த சோழ அரசும், நான்காம் நூற்றாண்டில் பல்லவ அரசும், ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டிய அரசும் அவர்கள் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்திருத்தல் கூடும். தொண்டைநாடிழந்த பல்லவர், தமிழகத்துக்கு வெளியில் இருந்து கொண்டே, தங்கள் பட்டயங்களில் காஞ்சியில் ஆண்டதாகக் குறித்துக் கொள்கின்றனர். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில்தான் பல்லவன் சிம்ம விஷ்ணு ஒரு புறமும், பாண்டியன் கடுங்கோன் மறுபுறமும் (575-600) களப்பிரரைத் துரத்தித் தமிழகத்தில் தத்தம் அரசை நாட்டியதாகப் பெருமையுடன் கூறிக் காண்டனர். ஒருவேளை இரு சாராரும் ஒன்றுபட்டே ச்செயலை ஆற்றியிருத்தல் கூடும்.

களப்பிரர் வீழ்ச்சியின் பின்னும் சோழர் ஒரு சிறு பகுதியில் சிற்றரசராகவே இருந்தனர். பாண்டியரும் பல்லவரும்