164 ||.
அப்பாத்துரையம் - 16
செயற்கைக் காவியங்களின் பகட்டாரவாரப் பாணியில் சொல் அணி அடுக்குகளுடன் விரிவாக வருணிக்கிறது.
66
'சாளுக்கியப் படைவீரர் தொகை பல நூறாயிரக் கணக்கில் இருந்தது. ஆனால், பல்லவன் பரமேசுரவர்மன் ‘அரிவாரணம்' என்ற தன் போர் யானை மீது, 'அதிசயம்' என்ற தன் போர்க் குதிரை மீதும் அமர்ந்து சுழன்று சுழன்று சென்று சாளுக்கியப் படையணிகளாகிய அலை கடலைக் கலக்கினான். சாளுக்கிய வீரர் வெருண்டோடினர். விக்கிரமாதித்தன் படையிழந்து தன்னந் தனியனாய் ஒரு கந்தலாடையால் தன்னை மறைத்துக் கொண்டு ஓடினான்.”
உதயேந்திரப் பட்டயம் போர் முடிவைச் சுருக்கமாகத் தெரிவிக்கிறது.
பெருவள நல்லூர்ப் போரில் விக்கிரமாதித்தன் தோற்றுத் தன் தாயகத்துக்கே ஓடிவிட்டான்.
பல்லவப் பேரரசின் தென்கோடியிலுள்ள பெருவள நல் லூரிலேயே போர் நடந்ததால், சாளுக்கியப் படைகள் அத்தோல்வியின் பின் அப்பேரரசின் பரப்பு முழுதும் தாண்டியே தாயகம் செல்ல முடியும். இந்த அளவுக்கேனும் பெருவள நல்லூர்த் தோல்விக்குப் பின் அவை சீர் குலையா திருந்திருக்க வேண்டும் என்று நாம் நம்பலாம். எனவே சாளுக்கியர், பெருவள நல்லூரிலேயே முற்றிலும் சீர்குலைந் தோடினர் என்பது பல்லவரின் மிகையுரையாகவே இருக்கக்கூடும். அவர்கள் தோற்ற பின்னும் போரிட்டுக்கொண்டே எல்லை தாண்டியிருக்க வேண்டும். ஆயினும், நெல்வேலிப் போரும் பெருவள நல்லூர்ப் போரும் தமிழகத்துக்குத் தெம்பும் வலுவும் தந்தன என்பதில் ஐயமில்லை. களப்பிரர் படையெழுச்சியால் உருக்குலைந்து நின்ற தமிழகம் இடைக்கால முதற் பாண்டியப் பேரரசின் ஆட்சியிலேயே மீண்டும் நிமிர்ந்து நின்று வெற்றி எக்களிப்புடன் மறுபடியும் வடக்கு நோக்கத் தொடங்கிற்று என்னலாம். அடுத்த தலைமுறைகளும் அதனைத் தொடர்ந்து வந்த சோழப் பேரரசர் ஆட்சியும் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
பல்லவப் பேரரசில் துளிர்த்துப் பாண்டியப் பேரரசில்