உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

கங்க

173

யிலுள்ள வடதமிழகப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த போர்களேயாகும். உதயசந்திரனுக்கு மேலே கூறியபடி அதிகனும் அரசன் பெரும்பிடுகு முத்தரசனும் உதவினர். இப்போர்களுள் பாண்டியன் வெற்றிகளும் பலவாயிருந்திருத்தல் கூடும். உதயசந்திரனின் பல்லவ வெற்றிகளுள் பலவாயிருந் திருத்தல் கூடும். எனவே அவரவர் வெற்றிகளையே அவரவர் குறித்துள்ளனர். ஆயினும் பாண்டியரே தாக்குதல் போர் நடத்தினர். அவர்களே அரசியல் நோக்கத்துடனும் போராடினர். இதனால் அவர்களே பெரும் பொருட்குவைகளைக் கைப்பற்றிய தாகவும், நாட்டெல்லையை விரிவுபடுத்தியதாகவும் கூறுகின்றனர். உதயசந்திரன் போர் நோக்கம் தற்காப்புப் போராகவே இருந்தது அவன் தன் பேரரசனை விடுவித்துப் பேரரசைக் காப்பதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தான். இதனாலேயே இருவருமே வெற்றி கண்டதாகக் கூறிக் கொள்ள முடிந்தது.

இப்போர்க்களங்கள் யாவும் பெரும்பாலும் புதுக்கோட்டை பகுதியில் உள்ளன. ஒரு சில தஞ்சை திருச்சிராப்பள்ளிப் பகுதி களுக்குரியனவாகவும் இருக்கக் கூடும்.

நெடுவயல் முதல் குழும்பூர் வரையிலுள்ள ஏழு போர் களைப் பாண்டியனின் வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியன் பெரு வெற்றிகளாகக் கொண்டாடுகின்றது. இவற்றுள்ளும் முதல் ஐந்தும் பொதுப்படை மொழியிலேயே வருணிக்கப்படுகின்றன. “கடுவிசையால் எதிர்ந்தவரை நெடுவயல் வாய் நிகர் அழித்து, கறுவடைந்த மனத்தவரை

குறுமடை வாய்க் கூர்ப்பழித்து,

மன்னிகுறிச்சியும் திருமங்கையும்

முன்னின்றவர் முரணழித்து,

மேவலோர் கடல்தானையோடு ஏற்றெதிர்ந்தவரைப் பூவலூர்ப்புறங்கண்டும்

கொடும்பானார் என்பது புதுக்கோட்டைப் பகுதியில் முன்பு ஆண்ட கொடும்பாளூர் வேளின் தலைநகரம் ஆகும். அதற்கேற்ப அது கோட்டை சூழ்ந்த நகராகக் குறிக்கப்படுகிறது. இப்போரில் குதிரைகளும் யானைகளும் பாண்டியரால்