தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
175
பாண்டியனும் வெற்றி பெற்றனர். பெண்ணாகடத்தில் பல போர்கள் நிகழ்ந்திருப்பதனால், இப்போரை நாம் முதலாம் பெண்ணாகடப் போர் என்று கூறலாகும்.
மண்ணை முதல் குரவழுந்தார் ஈறான ஏழு போர்களும் தம் வெற்றியாகவே பல்லவர் குறிக்கின்றனர்.
நென்மலியில் வெருவச்
செருவேல் வலங்கைப் பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்'
என்று நென்மலிப் போரைத் திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமொழியில் குறிப்பிட்டுள்ளார்.
கரூர்ப் போரிலேயே பல்லவப் படைத்தலைவன் உதயசந்த திரன் பல்லவ அரசுரிமைப் போட்டியாளனான சித்திர மாயனைப் போரில் வென்று நந்திவர்மன் ஆட்சிக்கும் அரசுரிமைக்கும் உறுதியளித்தான்.
இப்போராட்டம் கிட்டத்தட்டச் சரிசமப் போராட்டம் என்னலாம். ஏனெனில் பாண்டியர் வெற்றிகள் பெரும்பாலும் பாண்டிய நாட்டெல்லைக்குள்ளும், பல்லவர் வெற்றிகள் பெரும் பாலும் பல்லவ எல்லைக்குட்பட்ட சோழ நாட்டிலுமே இருக் கின்றன. ஆயினும் போர் முடிவில் பாண்டியன் கையே ஓங்கியும், பல்லவன் கை தாழ்ந்தும் இருந்தன என்றே தோன்றுகிறது. பல்லவனுக்கு உதவி செய்த அதிகன்மீதும் முத்தரசர் மீதும் பாண்டியன் இப்போரின் பின் எதிர் நடவடிக்கை எடுக்க முடிந்தது. ஆனால், பாண்டியப் போராட்டத்துக்கிடையிலேயே பல்லவப் பேரரசு சாளுக்கியர் தாக்குதலுக்கு ஆளாயிற்று.
பல்லவப் பேரரசை விட, அதைத் தாக்கி வலுப்பெருக்கி வந்த சாளுக்கியப் பேரரசு ஆபத்தானதென்று பாண்டியர் கருதியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் பல்லவருடன் சேர்ந்தவரைத் தண்டித்ததுடன் அமைந்தனர். பல்லவ பாண்டியப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு பல்லவர்களைப் போலவே சாளுக்கியருக்கெதிராகப் பாய முனைந்தனர்.