உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

|| - -

அப்பாத்துரையம் - 16

அது வெளியிடப்பட்ட நெடுஞ்சடையனின் மூன்றாம் ஆண்டு (768) சென்றபின் நடந்ததாதல் வேண்டும். இப்போரில் அதிகன் மதுரை யிலேயே சிறைப்படுத்தப்பட்டான்.

குடகொங்கத்து அடல்மன்னனைக் கொல்களிற்றொடும் கொண்டுபோந்து கொடி அணிமணி நெடுமாடக் கூடல்மதி லகத்து வைத்தும்

என்று சீவரமங்கலத்துச் செப்பேடு இதனைக் குறிப்பிடுகின்றது.

ப்பாண்டியன்

கொங்கநாட்டு வெற்றியின் பின் இப்பாண் அந்நாட்டில் (இன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள) காஞ்சிவாய்ப் பேரூரில் தன் வழிபடு தெய்வமாகிய திருமாலுக்குக் 'குன்றமன்னதோர் கோயில்' கட்டினான். கரவந்தபுரம் என்னும் கோட்டையைத் திருத்தியமைத்தான். இது அதிகன் கோட்டை களுள் ஒன்றாக இருக்கலாம். அது திருநெல்வேலியில் ஆய் வேளின் கோட்டைகளுள் ஒன்றான களக்காடு என்பாரும் உளர்.

வெள்ளூர், விண்ணம், செழியக்குடி, நாட்டுக்குறும்புப் பறந்தலைகள்

இவ்வூர்கள் எங்கிருந்தன என்று தெளிவாக அறிய முடிய வில்லை. வெள்ளூர் பின்னாளில் சோழர் பாண்டியப் போர்க் களமாயிருந்த ஊரானால், அது மதுரைக்கருகில் உள்ளதே. இவ் விடங்களில் முறியடிக்கப்பட்ட குறும்பரும் யார் என்று கூற முடியவில்லை.பின்னாட்களில் சோழர் காலத்திலும் விசயநகரப் பேரரசர் காலத்திலும் பாளையக்காரர்களாக நிலவிய பெருங்குடி மக்களாகவே அவர்கள் இருந்திருத்தல் கூடும்.

பொன்மலர்ப் புறவில் வெள்ளூர், விண்ணம், செழியக்குடி என்று

இவற்றுள் தெவ்வர்

அழியக் கொடுஞ்சிலை

அன்றுகால் வளைத்தும்