உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210

அப்பாத்துரையம் - 16

விசயாலயன் முதல் (9-ஆம் நூற்றாண்டு) இராசராசன் காலம் வரையுள்ள பெரும் பேரரசின் காலத்தை வல்லரசுக் காலம் என்னலாம். இக்காலத்திலேயே இடைக்காலப் பாண்டியப் பேரரசின் எல்லையும் பல்லவப் பேரரசின் எல்லையும் தாண்டிச் சோழப் பேரரசு வளர்ந்து விட்டது காண்கிறோம் ஆனால், பாண்டிய பல்லவ காலத்திலேயே வடதிசைப் பேரரசாகிய சாளுக்கிய அரசினிடமாக, புதிதான இராஷ்டிரகூடப் பேரரசு எழுந்திருந்தது. தென் தமிழகத்தில் புதிய பேரரசான சோழப் பேரரசு ஒன்று மட்டுமே நீடித்தது. அது வடதிசையில் புதிய பேரரசான இராஷ்டிரகூடருடன் போட்டியிட்டது.

சோழப் பெரும் பேரரசின் பெரும் பேரரசுக் காலம் அல்லது உச்சவாழ்வுக்காலம் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகிய இருவர் ஆட்சிக்காலமே. இராசேந்திரன் புதல்வர் ஆட்சிகள் இவ்வுச்சப் புகழை உச்ச நிலையிலேயே காத்தன.

முதலாம் குலோத்துங்க சோழன் காலமுதல் ஒரு நூற்றாண்டுக் காலம்வரை சோழப் பேரரசு வளர்ச்சியுறாமல் உறுதியுடன் பேரரசாக நிலவிய காலம் என்னலாம். இப்பேரரசுக்கு அச்சமயம் இருந்த பகைகள் உட்பகைகளுமல்ல, புறப்பகைகளும் அல்ல -எல்லைப் புறப் போட்டிகள் மட்டுமே என்னலாம். வடதிசையில் மேலைச் சாளுக்கியர் வென்றடக்கப் படாமலே இருந்தனர். தெற்கிலோ மீண்டும் மீண்டும் வென்றடக்கப்பட்டும், அடங்காதவர்களாகப் பாண்டியர் விளங்கினர். சோழப் பேரரசின் வளர்ச்சியைத்தடுக்க மேலைச் சாளுக்கியர் ஓரளவு காரணமாயிருந்தனர். ஆனால், அவ்வளர்ச்சியைத் தடுப்பதற்கு மட்டுமன்றி, அதன் வீழ்ச்சிக்கே காரணமாயிருந்தவர்கள் பாண்டியர்களே என்னலாம்.

சோழப் பெரும் பேரரசைத் தடுத்தழித்துப் பாண்டியர் மீண்டும் பேரரசராக முடிந்தது. ஆனால், அவர்கள் பேரரசு சோழப் பேரரசின் எல்லையைச் செயலிலும் சென்று எட்ட எல்லையையும் அது நீடித்துக் காக்கத் தவறிற்று. சோழப் பேரரசு வீழ்ச்சியுறாமல் இருந்தால், இஸ்லாமியப்படையெடுப்பும்