உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(224

அப்பாத்துரையம் - 16

தொண்டை நாடு முற்றிலும் கிட்டத்தட்ட நிலையாக இழந்து, சோழர் தாயக எல்லையுடன் சில தலைமுறைகள் அமைந்து நின்றது.

இப்போரில் கங்கன் இரண்டாம் பூதுகன் இராஷ்டிர கூடருக்கு அளித்த உதவி மிகப்பெரிது. அதற்குப் பரிசாக வனவாசி 12,000மும் பெல்வொளெ 300-ம் அவனுக்கு அளிக்கப்பட்டன.

இராஷ்டிரகூடர் தொண்டை நாடு முழுவதும் வென்றடக்க ஆறாண்டுகள் பிடித்தன. ஆனால், அதன்பின் 955 முதல் அது முழுவதும் இராஷ்டிரகூடர் நேராட்சியிலேயே இருந்தது. சிறிது சிறிதாகவே பராந்தகன் பின்னோர்கள் அதை மீட்க முடிந்தது.

தும்பைப்பதிப் போர் 938

இக்காலத்தில் சிற்றரசர்களுள் கீழைச் சாளுக்கிய நாட்டின் தென்பகுதியை ஆண்ட மன்னன் வீமன் ஒரு பெரு வீரனாய் இருந்தான். பராந்தகன் ஆட்சியின் போது அவன் இராஷ்டிரகூட அரசன் நான்காம் கோவிந்தனை முறியடித்ததும் பின் சோழரால் தாக்கப்பட்டதும் கண்டோம். இவற்றுக்கிடையே அவன் 938-ல் கங்க மன்னனாகிய எறெயகங்களையும் நுளம்பன் ஐயப்பனையும் தும்பைப் பதிப் போரில் முறியடித்து வெற்றி எய்தினான்.

சோழ - பாண்டியப் போராட்டம்: சேவூர்ப் போர் 1953 இலங்கைப் படையெடுப்பு; சேவூர்ப் போர் II 962.

முதற் பராந்தக சோழன் இறக்கு முன்பே தக்கோலப் போரில் பெரு வீரனாகிய அவன் மூத்த புதல்வன் இராசாதித்தன்

உயிரிழந்தான். அவன் இரண்டாம் புதல்வனாகிய

கண்டராதித்தன் (956 957), அப்போரிலேயே கலந்து கொண்டிருந்த மூன்றாம் புதல்வனாகிய அரிஞ்சயன் (956-957) ஆகியோர் முதற் பராந்தகன் ஆட்சியிறுதியையே தம் ஆட்சியாகக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக ஆண்டு

மாண்டனர்.

முதற் பராந்தகன் ஆட்சியிலேயே சோழர் தொண்டை நாடு முற்றிலும் இழந்து விட்டனர். அத்துடன் அவ்வாட்சியிறுதியில் கண்டராதித்தன் பட்டத்துக்கு வந்தவுடனேயே மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் மகனாகிய வீர பாண்டியன் இராஷ்டிரகூடத்