தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
227
மலர்ச்சியுற்றது என்னல் வேண்டும். சங்க காலத்துப் பாடல்களில் பெரும்பகுதி நமக்கு வந்தெட்டாதது போலவே, இச்சோழர் காலத்துத் தமிழ்வளத்திலும் பெரும்பகுதி நமக்கு வந்து எட்ட வில்லை. அந்நாளைய இலக்கண நூலாகிய வீரசோழியத்தின் உரையில் கண்ட மேற்கோள்களில் பல சுந்தர சோழனையும் மற்ற முன் பின் சோழர்களையும் குறிப்பிட்டுள்ளன. இறந்துபட்ட அக்கால நல்லிலக்கிய ஏடுகளையும் நற்பண்புகளையும் அவை நமக்கு நினைவூட்டுகின்றன.
இராமாயணம் பாடிய கம்பர் இக்காலத்தவரே என்று கருதுகின்றனர். பல தமிழ்ப் புலவர்கள். இது எப்படியானாலும், சுந்தர சோழன் காலமே கன்னட இலக்கியத்தில் பெருமலர்ச்சி ஏற்பட்ட காலம் என்னலாம். சுந்தர சோழனின் புகழைத் தமிழ் ஏடுகளிலும் பன்மடங்காக மிகைப்படுத்திக் கன்னட காப்பியங்கள், புனை கதைகள் தீட்டியுள்ளன. ஆனால், அவற்றுட்பல நின்றசீர்நெடுமாறனான சுந்தர பாண்டியன் புகழுடன் இவன் புகழை ஒன்று படுத்திக் குளறுபடிசெய்துள்ளன.
‘சோழன் முடித்தலைக் கொண்டவன்' என்று பெருமை யடித்துக் கொண்ட வீரபாண்டியனை வீழ்த்திப் பாண்டிய நாட்டை மீண்டும் கைப்பற்றச் சுந்தர சோழன் பேரவாக் கொண்டான். முன் பாண்டியன் வெற்றிகண்ட அதேகளத்திலேயே சோழனும் போரிட்டதால் இதனை நாம் இரண்டாம் சேவூர்ப் போர் என்னலாம். இது சுந்தர சோழனின் ஐந்தாம் ஆட்சி து ஆண்டில்,962-ல் நடைபெற்றதாகத் தெரிகிறது.
இப்போர், சோழர்களை இலங்கைப் படையெழுச்சிக்கும் தூண்டிற்று. ஏனெனில் இலங்கையரசன் நான்காம் மயிந்தன் சேவூர்ப் போரில் பாண்டியனுக்கு உதவியாக ஒரு பெரிய இலங்கைப் படையை அனுப்பியிருந்தான். இப்போரிலும் இதன் பின் நடைபெற்ற இலங்கைப் படையெடுப்பிலும் சோழர் படைகளைச் சுந்தரசோழன் மூத்த புதல்வனான ஆதித்தனும், கொடும்பாளூர்க் குறுநில மன்னன் பராந்தகன் சிறியவேளான் என்பவனும், தொண்டை நாட்டுச் சிற்றரசன் பார்த்தி பேந்திர வர்மனும் நடத்திச் சென்றனர். இலங்கைப் படையெடுப்பின் பின்