உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(234

அப்பாத்துரையம் - 16

காட்டுவதாகவே இருக்கிறது. இராசராசன் எக்காரியம் பற்றியோ சேர அரசனிடம் ஒரு தூதனை அனுப்பியிருந்தான். தூதன் யார் என்பதுகூட நமக்குத் தெரியவில்லை. ஆனால், சேரன்தூதன், தூதை மறுத்ததுடன் நில்லாமல் அரசு நெறிக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் தூதனை அவமதித்து, அவனை உதகை யிலிருந்த தன் சிறைக்கூடத்தில் இட்டுப் பிணித்துவைத்தான்.

இச்செய்தி கேட்ட பேரரசன் செயல், சேர நாட்டை எரித் தழித்தது. அத்துடன் அமையவில்லை. பேரரசெங்கும் சுழன்றடித்தது.பேரரசைக் கீழ்திசை காணாத, கேளாத அளவில் அடங்கொண்ட திண்தோள் அரசாக்கிற்று!

சோழர் பெரும்படை பாண்டியனைத் தாக்கிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பின்னரே காந்தளூரை நோக்கிப் பாய்ந்தது என்று அறிகிறோம். இதற்கு ஒரு காரணம் உண்டு. காந்தளூர்ச் சாலை ஒரு கடற்படைத்தளம்; அதன் முழுஆற்றலையும் அழிக்க வேண்டுமானால் நிலப்படை மட்டும் போதாது.கடற்படையும் வேண்டும். கடற் கடம்பரை வேரறுத்த பண்டைய நாட்டு சேரர் காலமுதல் சோழர் காலம்வரை சேரரின் பெருஞ் சிறப்பும் பேராற்றலும் அவர்கள் கடற்படையாகவே இருந்தது.பாண்டிய சோழரிடமும் பல்லவரிடமும் கூடப் பெருங் கடற்படை இருந்ததானாலும், அவைப் பாதுகாப்புக்குப் பயன் படவில்லை. சேரருக்கோ நிலத்திசையில் சையமலையின் பேரரண் இருந்தபடியால், கடற்படை புதுவலுவூட்டும் கருவியாயிருந்தது. சேரரை எவர் வென்றாலும் நீடித்து ஆட்சி செய்ய முடியாதிருந்ததன் காரணம் இதுவே. இராசராசன் சேரரின் இந்த நிலையான ஆற்றலை அழிக்க எண்ணியதால், கடற்படையைக் குமரி சுற்றிக் கடல் வழி செலுத்தி, இதற்குத் துணையாகப் பாண்டியநாடு கைப்பற்றிச் செல்ல எண்ணினான்.

இராசராசன் காலத்துச் சேரன் பாஸ்கர இரவிவர்மன் (978-

1036) TÖÖTLIQJÓT.

காந்தளூர்ப் சாலைப்போர் நிலப்போர் மட்டுமன்று; நிலப் போரும் கடற்போரும் கலந்த கடல்நிலப் போரேயாகும். அப் போரில் சேர மன்னனின் கப்பற் படைகள் அழிந்து போயின என்று அறிகிறோம். தகடூர்ப் போரை நேரே இருந்து கண்டு தீட்டிய அரிசில்கிழார், பொன் முடியார் போன்ற தமிழ்ப் புலவர்