உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(236

அப்பாத்துரையம் - 16

“மதகயத்தால் ஈரொன்பது சுரமும் அட்டித்து

உதகையைத் தீ உய்த்த உரவோன்”

(இராசராச சோழன் உலா: 40 - 41)

என்று கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மூவருலாவிலும்,

"சதய நாள்விழா உதியர் மண்டலந்

தன்னில் வைத்தவன் தனியோர் மாவின்மேல்

உதய பானுவொத்து உதகை வென்றகோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும்

(கலிங்கத்துப் பரணி 201)

என்று கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டாரும் நேரில் காணா விட்டாலும் நேரில் கேட்டு இப்போரை வருணித்துள்ளனர்.

‘பகல் ஒன்றில் ஈரொன்பது சுரம்' (பன்னிரண்டு மணி நேரத்துக்குள் பதினெட்டுக் காடு கடந்து) என்ற தொடர் சோழர் படை சென்ற வேகத்தையும் போரின் உக்கிர வேகத்தையும் நம் கண்முன் கொண்டு வருவனவாகும். ‘உதகை நூறி’ உதகை தீ உய்த்த' என்பனவும் போர்க் காட்சியைக் கண்முன் நிறுத்து பவைகளே.

இராசராசன் பிறந்த நாள் சதயம்: அப் பிறந்த நாள் உதகைப் போரையடுத்து நிகழ்ந்தது: சேர நாட்டிலே, சேரனின் குதிரை மீதேறி, சதய நாள் விழாவை? உதகை வெற்றியாகவே கொண்ட டினானென்றும், அவன் குதிரையேறி உதகைக் கோட்டைக் குள்ளே புகுந்தது உதயசூரியன். அந்நாட்டில் மேற்குத்தொடர் மலையில் எழுவது போன்றிருந்ததென்றும் கவிப்பேரரசரான சயங்கொண்டார் தரும் காவியக் காட்சி தமிழர் வரலாற்று வழியாக வந்த கண்கொள்ளாக் கலைக் காட்சியாகும்.

உதகை என்பது தற்காலத் திருவாங்கூரில் கோட்டாறு என்ற பழம் பெயரையுடைய தற்கால நாகர்கோவிலுக்கு வட மேற்கே கற்குளம் வட்டத்திலுள்ள ஓர் ஊர்ழூ அது அந்நாளில் மாட மாளிகை கூடகோபுரம் கோட்டை உட்கோட்டைகளை யுடைய சேரரின் பெருநகரமாய் இருந்தது. தூதனைச் சிறையில் வைத்துத் துன்புறுத்தியதால் வந்த கோபத்தாலேயே இராசராசன் இத்தகைய அழிவு வேலையைச் செய்ய நேர்ந்தது என்று சுட்டிக்