246 ||
அப்பாத்துரையம் - 16
திரிந்த, தமிழினத்திசை மொழிகள் நிலவிய பகுதிகளாக சிங்களமும், முந்நீர்ப் பழந்தீவும் பழய உரை மேற்கோள்களில் குறிக்கப்படுகின்றன. கடல்கொண்ட குமரி நாட்டில் குமரி யாற்றுக்குத் தேற்கேயிருந்த தமிழகப் பரப்பே அவை என்பதையும் அவ்வுரைகள் குறிக்கின்றன. 'கள்ளித் தென்கரைக் கடற் பழந்தீவும்' என்ற தெய்வச்சிலையார் உரைமேற்கொள் செய்யுளை இதற்குச் சான்றாகக் கூறலாம். இச்செய்யுள் தொல்காப்பியத்திற்கு முன்னிருந்த அகத்தியச் செய்யுள் என்றும் குறீக்கப்பட்டுள்ளது. அதுபோலப் பாண்டியநாடு 'கன்னி நாடு', 'கன்னியாறு' ஓடி வளப்படுத்திய நாடு என்று குறிக்கப்படுகிறது. 'கன்னியாறு’ என்பது வைகை, தாமிரவருணி போன்ற சிறிய ஆறு அல்ல. காவிரிக்கு ஒப்பாகவோ, அதனைவிடவோ பெரிய ஆறாக அது ருந்திருக்க வேண்டும் என்னலாம். சிலர் தாமிரவருணியையும், சிலர் தென் திருவாங்கூரிலுள்ள பழயாற்றையும் கன்னியாறாகவோ, கன்னியாற்றின் பகுதியாகவோ கொள்வதுண்டு. இலங்கையில் எதிர்த் திசையிலும் தாமிரவருணியின் தொடர்ச்சி இருந்திருப்பது நோக்க, பண்டைக் கன்னியாறு தற்போதைய தாமிர வருணியையும் பழயாற்றையும் கிளையாறுகளாகக் கொண்டு இலங்கை நடுப்பகுதியினூடாக ஓடிக் குமரி நிலத்தின் வழி தென்கடலில் சென்று விழுந்திருக்க வேண்டும் என்று தோற்றுகிறது. டைச் சங்ககால அலைவாய் அல்லது கவாட புரமும் முந்நீர்ப் பழந்தீவும் அவ்வாற்றின் கடல் முகத்தருகிலேயே இருந்திருக்கக் கூடும். தென்மதுரையைக் கரையில் கொண்ட பஃறுளியாறு இக்குமரியாற்றிலிருந்து நெடியோனால் வெட்டப்பட்ட ஒரு பெருங் கால்வாயாய் இருத்தல் வேண்டும் என்னலாம்.
பழந்தீவத்தின்மீது இராசராசன் படையெடுப்பதற்குரிய காரணம் சேரநாட்டவர்க்கு அத்தீவின் மக்கள் கொடுத்த
தொல்லையாகவே இருக்கக்கூடும் என் று அறிஞர்
பண்டாரத்தார் கருதியுள்ளார். சேரநாட்டுப் பகுதியில் வடக்கே கடம்பர் கடற் கொள்ளைக்காரர் மூலதளமாய் இருந்ததுபோல, இதுவும் இக்காலத்தில் கடற்கொள்ளைக்காரர் மூலதளமாய் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. உலகில் தமிழர் பதின் கூற்று எண்மானம் (Decimal Notation) பரவுமுன் இருந்த அறுகூற்று, பன்னிரண்டன் கூற்று மானங்கள் (Sexagesimal