உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

259

யிருக்க இடமுண்டு. ஏனெனில் இதே தொடர்புகள் தொலைத் தென்கிழக்காசியாவிலும் காணப்படு கின்றன.

இராமாயணக் கதையில் வரும் சித்திரக் கூடம், சக்கர கோட்டமே எனப்படுகிறது.

சோழர் காலச் சக்கரக் கோட்டம் இந்நாளைய இந்திய மாநிலத்தின் நடுமாகாணத்தில் விசாகப்பட்டணம் மாவட்டத் துக்கு வடமேற்கிலுள்ள பஸ்தர்த் தனியரசில் உள்ள ஒரு கோட்டை நகர் என்று கருதப்படுகிறது.

‘பஸ்தர்’ப் பகுதியில் தம்மை நாகர் என்றும் போக புரத்தரசர் என்றும் குறித்துக் கொண்ட அரசர் கால்வழியினர் 11- 12-ஆம் நூற் றாண்டில் இருந்தனர். 'மாசுணி' (பாம்பு) என்பது நகர் குறித்த பேராதலால், மாசுணி தேசம் என்பது அவர்கள் ஆண்ட பகுதியாகவே இருக்கவேண்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

மதுரை மண்டலம், நாமனைக் கோணம், பஞ்சப்பள்ளி ஆகியவையும் இந்த எல்லையருகிலேயே இருக்க வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் ஊகிக்கின்றனர்.

மதுரை மண்டலம் யமுனைக்கரை மதுரையை நினைவூட்டு கிறது. ஆனால், சோழ எல்லையிலிருந்து அது நெடுந்தொலை வானதனால் ஆராய்ச்சியாளர் மதுரை மண்டலம் அதுவா யிருக்கக்கூடும் என்று கருதவில்லை. நாமணைக்கோணம் என்பது பஞ்சப்பள்ளி அருகிலேயே இருக்கவேண்டும் என்பதும் ஊகமேயாகும். வை வருங்கால ஆராய்ச்சிகளாலன்றித் தெளியக் கூடாதவை.

வடதிசைப் போர் 2. ஆதிநகர்ப் போர்

ஆதிநகர் வெற்றியின் பயனாகவே ஒட்டர தேசமும் கோசல மும் கைப்பற்றப்பட்டன.

ஒட்டர தேசம் என்பது தற்கால ஒரிசா மாகாணம்.

கோசலம் என்பது இராமாயண இராமனுக்குரிய கங்கைக்கு வடகரையிலுள்ள கோசலத்தையே நினைவூட்டுவது, அதையே இயல்பாகக் குறிப்பது. ஆனால், இது கங்கை கடப்பதற்கு முன் கூறப்பட்டதாதலால், கங்கைக்குத் தெற்கில் ஒரிசாவை ஒட்டிக்