உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(262

|| - -

அப்பாத்துரையம் - 16

குலையாமல் இருந்ததாக அறிகிறோம். அதற்குத் தொலைவி லிருந்து நீர் கொண்டு வரும் கால்வாய்கள் தூர்ந்த பின்னும் சோழர் கட்டுமானப் பெருமையை அது காட்டியே நின்றது. ஆனால், வரலாற்றுப் பெருமையில் அக்கரையற்ற, கலைப் பெருமையறியாத தொடக்கக் கால வெள்ளை அதிகாரிகள் காவிரிக்கு ஓர் அணைகட்டும் சமயம் அதைச்சாக்கிட்டு இவ் ஏரியின் கரைகளைச் சிதைத்தெடுத்தாகத் தெரிகிறது. அப்பகுதி மக்கள் இது கண்டு கலவரம் செய்ததனால், ஒரு கரையேனும் பழய கட்டுமானம் காட்டி இன்னும் நிலவுகிறது.

சோழர் படையெடுப்பும் வடதிசை நிலைமைகளும்

சோணாட்டைப் போலவே, ஆனால், அதனைவிட எல்லை குறைந்து, தென்னாட்டின் வடமேல் கோடியில் சோழர் காலங் களில் மேலைச் சாளுக்கிய அரசு வலிமையுடைய அரசாகவே நிலவிற்று. அதன் வடக்கில் பாரமாரரது மாளவ அரசும் வலிமை யுடையதாகவே நிலவியிருந்தது. ஆனால், சிந்து கங்கைச் சம வெளியில் கீழ்க் கோடியிலுள்ள மகிபாவலன் பேரரசு நீங்கலாக, வடமேற்குப் பகுதி முழுவதும் வலிமையற்ற சின்னஞ்சிறு அரசு களே நிலவின இவையும் ஆயிர ஆண்டுக் காலமாகக் குஷாணர், பார்த்தியர், ஊணர், அராபியர் ஆகியவர்களின் படையெடுப் பினால் ஒரே குழப்ப நிலையில் தான் இருந்தன. இராசேந்திரன் காலத்தில் 1000 முதல் 1035வரை கஜினிமாமூது, இராசேந்திரன் தெற்கிலிருந்து படையெடுத்த கங்கைக் கரைவரை, தானும் பதினெட்டுத் தடவை படையெடுத்து, கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி, மக்களைக் கொள்ளையிட்டு, பெரும் பொருட் குவை சூறையாடிச் சென்றான்.

திரு நீலகண்ட சாஸ்திரியின் முன்னுரையுடன் ‘திராவிடம்’ என்ற ஆங்கில நூல் இயற்றிய ஈழத்து ஆசிரியர் திரு இ.எஸ். தம்பி முத்து அவர்கள் வடநாட்டின் இந்த இருதிசைச் சமகாலப் படை யெடுப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்லாமியருக் கெதிராகத் தெற்கும் வடக்கும் மட்டும் இணைந்திருந்தால், இந்தியா எத்தனை பாதுகாப்புடையதாக இருந்திருக்கும் என்று அவர் ஆற்றாமையுடன் குறிக்கிறார். ஆனால்,வரலாற்றாசிரியரின் குறுகிய கண்ணோட்டம் இரண்டு படையெடுப்புக்களும் சமகாலத்தன என்பதைக் கூடக் கவனிக்கவிடாமல் செய்துள்ளது.