உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

271

வராய், அச்சமயத்தில் வீர அரசரைப் பெற்றிருந்ததனாலேயே அவர்கள் இப்பெரு

பிழைத்திருந்தனர்.

வீரச் செயல்களுக்குத் தப்பிப்

முதற் குலோத்துங்கனுடன் பேரரசு தளர்ச்சியடைந்து விட வில்லையானால், சாளுக்கியர் வீழ்ச்சியடைந்திருப்பது உறுதி. ஏனெனில் சாளுக்கியப் பேரரசும் சில நாட்களில் தளர்ச்சியுற்றது.

-

இலங்கைப் போர்க்களரி 1046 1054: 1055, 1067; அனுராதபுரம் போர் 1064 -1065

இலங்கை சோழர் ஆட்சியிலிருந்தாலும், தென் ரோகண நாட்டிலிருந்து மீட்டும் மீட்டும் கிளர்ச்சிகள் முதல் இராசேந்திரன் புதல்வர் மூவர் ஆட்சியிலும் இருந்து கொண்டே வந்தன. அது பற்றிய சோழர் கல்வெட்டுக்களும் இலங்கை வரலாற்றேட்டுச் செய்திகளும் மொத்தத்தில் ஒத்துவரினும் சில்லறை விவரங் களிலும் பெயர்களிலும் அவைஅடிக்கடி முரண்படுகின்றன.

இராசாதிராசன் காலத்திலேயே சோழர் மூன்று தடவை படையெடுத்து வெற்றி பெற்றனர். முதல்வெற்றி 1046-க்குரியது. இதில் துளுவ நாட்டில் ஓடி ஒளிந்திருந்த மகாலான கித்தியின் புதல்வன் முடியிழந்து துரத்தப்பெற்றான். இவனை மகாவம்சோ விக்கிரமபாண்டுஎன்றும், சோழ ஆதாரங்கள் விக்கிரமபாண்டியன் என்றும் கூறுகின்றன. சிங்களத் தாய், பாண்டியத் தந்தையையோ அல்லது சிங்களத் தந்தை பாண்டியத் தாயையோ அவன் கொண்டவ னாக இருக்கக்கூடும். பாண்டிய ஈழ அரசுரிமைகள் இரண்டுக்கும் அவன் உரியவனாக இருந்தான் என்று தோன்றுகிறது.

இராசாதிராசன் இரண்டாவது வெற்றி 1046-இல் கன்னர மரபினனான ஈழத்து அரசன் சீவல்லபன் மதனராஜனுக் கெதிரான தென்று சோழர் குறிக்கின்றனர். ஆனால், சோழரிடம் தோற்றூ1053-இல் உயிரிழந்தவன் விக்கிரமபாண்டுவின் மகன் ராசேந்திர பாண்டு என்று மகாவம்சோ கூறுகிறது.

1047 முதல் 1051 வரை அயோத்தி அரசகுமாரனான ஜகதீ பாலன் ரோகணத்தைக் கைப்பற்றி ஆண்டு, சோழர் கைப்பட்டு மாண்டான் என்றும், அவனது செல்வங்களோடு அவன் மனைவியை யும் மகளையும் சோழர்கள் தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர்