உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

279

காக்கவந்த சாளுக்கியர் உள்ள மானத்தையும் இழந்து அவ மானத்தைச் சுமந்து சென்றனர்.

இரண்டாம்

இப்பெரும் போரில் இரசேந்திரன் மட்டுமன்றி, இராசமகேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய அவன் இரு இளவல் களும் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது. ஏனெனில் மூவர் கல்வெட்டுக்களுமே அவ்வெற்றிக்குரிய வர்களாக அவ்வவர்களைப் பாராட்டுகின்றன.

இவ்விளவல்கள்

இருவருள்

மூத்தவனாகிய இராசமகேந்திரன் இளவரசுப்பட்டங்கட்டி அரசனாகு முன்பே மாண்டவன் என்று அறிஞர் பண்டாரத்தார் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளால் நிறுவியுள்ளார்.

சோழ சாளுக்கியப் போட்டி 1063 -1067: கூடல் சங்கமப் CLITIT 1064

வீரராசேந்திர சோழன் கால முழுவதும் பெரிதும் போர் களிலேயே கழிந்தன. தன் தமையன்மார் கொண்ட உறுதிகளைத் தான் நிறைவேற்றியதாகவும். 'ஆகவமல்லனை ஐம்மடி வெந் கொண்டதாக, அதாவது ஐந்து தடவை போரில் முறியடித் ததாகவும் இவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. இந்த ஐந்து போர்களும் கூடல் சங்கம வெற்றியுடனும் விசயவாடா வெற்றியுடனும் நிறைவு பெறுகின்றன.

முதற்போர் 1063

ஆகவமல்லன் பெருவீரனான தன் இளைய மகன் விக்கிர மாதித்தனைத் தன் பேரரசின் தென் எல்லையாகிய கொள்ளிப் பாக்கையில் அமர்த்தி, தக்க சமயம் பார்த்துச் சோழரிடமிருந்து கங்க பாடியைக் கைப்பற்றும்படி கூறியிருந்தான். வீரராசேந்திரன் முடிசூட்டு விழாவில் ஈடுபட்டிருந்த சமயம் விக்கிரமாதித்தன் இப்படையெடுப்பில் முறியடித்தான்.

2-ஆம் போர் 1064

கீழைச் சாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரன் சோழன் இரண்டாம் இராசேந்திரனின் மருமகன், முதல் இராசராசனின்