296 ||
அப்பாத்துரையம் - 16
காட்டுகின்றன. ஏனெனில், அது கிட்டத்தட்ட அவன் கால உலகினை அளாவியதாய் இருந்தது.
(1) வட இந்தியா: கன்னோசி
கன்னோஜ் அல்லது கன்யாகுப்ஜம் என்பது வடஇந்தியாவில் தற்கால உத்தரபிரதேசத்தில் காசிக்கு வட மேற்கிலுள்ள ஒரு நகரம். அதனை யாண்ட அரசனுடன் குலோத்துங்கன் நட்புறவு கொண்டிருந் தான். அவனால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தம் பற்றிய கல்வெட்டு எக்காரணத்தாலோ முற்றுப்பெறா நிலையில் உள்ளது. காலத்தில் அந்நாட்டை
குலோத்துங்கன்
ஆட்சிபுரிந்தவர்கள் மதனகோபால தேவனும் அவன் புதல்வன் கோவிந்த சந்திரனும் ஆவர். கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டு 1111-ம் ஆண்டுக்குரியதாதலால் குலோத்துங்கனுடன் நேச உறவு கொண்ட அரசன் கோவிந்த சந்திரனாகவே இருக்கக் கூடும். இந்நட்புக்கு இன்னொரு சான்றும் உண்டு. கன்னோசி அரசன் சூரிய வழி பாட்டினன். அதை மதித்துக் குலோத்துங்கன் ஓர் ஊரில் சூரியன் கோயில் அமைத்ததனால், அது இன்றளவும் அக்கோயிற் பெயரை ஊர்ப் பெயராகக் கொண்டுள்ளது.
(2) பர்மா
பர்மா தேசத்தில் புக்கம் என்ற நகரிலிருந்து ஆண்ட திரி புவனாதித்த தம்மராசன் (1084 - 1112) என்ற அரசன் ஒரு சோழ இளவரசனைப் புத்தசமயத்தினனாக்கி, அவன் மகளை மணந்து கொண்டான் என்று பர்மா நாட்டுக் கல்வெட்டு ஒன்று உணர்த்துகிறது. இளவரசன் யார் என்று தெரியவில்லை. ஆனால், சோழருக்கும் பர்மாவுக்கும் குலோத்துங்கன் காலத்தில் நேசத் தொடர்பு இருந்தது என்பதை இது காட்டும்.
பேகன் நாட்டரசன் கியான்ஸித்தாவுடனும் சோழன் தொடர்பு கொண்டிருந்தான்.
(3) கடாரம்
இளமையில் கடாரப் போரில் ஈடுபட்டு அந்நாட்டரசனுக்கு உதவியவன் குலோத்துங்கன். அந்நட்பு நீடித்ததென்பதை அவன்