உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

305

தலைவர்களில் பலரைக் கொன்று மீந்தவரைச் சிறைப்பற்றிச் சோழனிடம் கொணர்ந்து ஒப்படைத்தான்.

பராக்கிரம பாண்டியனையும் அவன் மகனையும் ஆதரிக்கப் போனதனால் விளைந்த தீங்குகளைக் கண்டு பராக்கிரமபாகு மனக் கசப்புற்றான். அவன் இப்போது படைக் கருவியைக் கைவிட்டுச் சூழ்ச்சிக்கருவியை மேற்கொண்டான்.குலசேகரனையே ஆதரிப்பதாகக் கூறி அவனுக்குப் பரிசில்கள் அனுப்பினான். குலசேகரனும், சோழன் தனக்குச் செய்த நன்றிமறந்து அதை ஏற்றுக் கொண்டான். கோட்டை வாயிலிலுள்ள இலங்கைப் படைத் தலைவர் தலைகளை அகற்றினான். சோழனிடம் பற்றுடைய தலைவர்களைத் தண்டித்தான்.

பாண்டியனது நன்றிக் கேடான இந்தப் போக்கைக் கண்ட சோழன் அவனை அழித்து வீர பாண்டியனையே அரசனாக்கும் படி அண்ணன் பல்லவராயனுக்குக் கட்டளையிட்டான். அண்ணன் பல்லவராயன் குலசேகரனைப் போரில் முறியடித்துத் துரத்தி விட்டு, வீர பாண்டியனையே அரசனாக்கினான். அவன் 1175 முதல் 1180 வரை ஆண்டான்.

இப்போரில் சோழன் இரண்டாம் இராசாதிராசன் பாண்டி நாட்டில் தன் பெருமையை நாட்டியதன்றி, இலங்கை யிலும் போர் செய்து வெற்றிகள் பெற்றதனால், ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோவிராச கேசரிவர்மன்' என்ற பட்டம் மேற் கொண்டான்.

பாண்டியர் உள்நாட்டுப் போர்

ஈழ - சோழ - பாண்டியப் போட்டி : II 1180 -1188 : திருவேடகப் போர் 1180: நெட்டூர்ப் போர் 1188 :

இலங்கைவேந்தன்,

குலசேகர பாண்டியனை

வசப்படுத்தியது போலவே வீரபாண்டியனையும் வசப்படுத்தத் தொடங்கினான். குலசேகரனைப் போலவே அவனும் நன்றி மறந்து இலங்கைப் பாசத்தில் இழைந்தான்.

இதே சமயம் தோற்றோடிய குலசேகரன் தன் செயல்களே தன்னை அழித்ததை எண்ணி எண்ணி மனமுடைந்து மாண்டான். அவன் புதல்வன் விக்கிரமன் மூன்றாம் குலோத்துங்க சோழனிடம்